அனைத்து கட்சியினரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது 2024 ஆம் ஆண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலும் மற்றும் 2026 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலும் தான் இதற்கிடையில் மத்திய அரசு வேறு ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானமாக உள்ளது மேலும் அதை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்து சர்ச்சைக்குரிய வகையில் பல விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது அப்படி நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வரும் பட்சத்தில் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி முடிந்து விடும் என்ற பயத்தில் திமுகவினர் தற்போது புலம்பி கொண்டிருக்கின்றனர் என விமர்சனங்கள் எழுந்துள்ளது...
மேலும் இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை எதிர்த்து வரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைதான் பேசு பொருளாகியுள்ளது. இதற்காக பாஜக தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எப்படியாவது வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது இந்நிலையில் ஏப்ரல் மாதம் வரவேண்டிய நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் வரும் என்று கருத்துக்கள் வெளிவந்த நிலையில் துரைமுருகன் வேறு திமுக தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் பேசியுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொண்டர்கள் கூட்டத்தில் பேசும் போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்தே தயாராகுங்கள் என்று தொண்டர்களை அறிவுறுத்தினார் மேலும் இது குறித்த அவர் பேசுகையில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது என்றும் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வருமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது என்றும் வழியில் செல்லும் போது உஷாராக கையில் கம்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஊர் பக்கம் சொல்வதைப் போல சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வருகிறது என்று நினைத்து நாம் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய மட்டுமல்லாமல் அனைவரும் ஆயத்தமாக இருங்கள் என்று தொண்டர்களுக்கு கூறியது தற்போது திமுகவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்படி திமுகவில் உள்ள மூத்த தலைவரான துரைமுருகன் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்று கூறியது திமுக தலைமையை கோபப்படுத்தியுள்ளது, மேலும் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் வரும் பட்சத்தில் அதற்குள்ளே தேர்தலா? ஏற்கனவே மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் கண்டிப்பாக இந்த தேர்தலில் தோல்வியை தழுவ வாய்ப்புகள் இருக்கின்றன பயத்தில் திமுகவினர் புலம்பி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.ஏற்கனவே திமுகவில் பல பிரச்சனைகள் போய் கொண்டு இருக்கும் சமயத்தில் துரைமுருகன் ஆளும் கட்சியான பாஜகவின் கருத்தை ஆதரித்து தொண்டர்கள் மத்தியில் பேசியது தற்போது பேசு பொருளாகியுள்ளது. திமுகவின் மூத்த தலைவரே இவ்வாறு தேர்தல் குறித்து கூறியது கட்சிக்குள்ளேயே பல பிரச்சனைகளை கிளப்பி உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுமட்டுமில்லாமல் அறிவாலயத்தில் ஒரு ரகசிய கூட்டம் வேறு நடந்துள்ளதாம், அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் I.N.D.I.A கூட்டணி குறித்த தொகுதி பங்கீடுகள் என தலைமை எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்து ரகசிய கூட்டம் நடந்துள்ளதாக வேறு சில தகவல்கள் கிடைத்துள்ளன..