24 special

போச்சு கடைசில இருக்கும் அமைச்சர் பதவியும் பிடுங்கப்பட போகிறது!

senthil balaji, puzhaljail
senthil balaji, puzhaljail

அமலாக்க துறையிடம் வசமாக சிக்கி தனது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு தனது பதவியை தன்னிடம் இருக்குமா அல்லது இதே இலாகா இல்லாத அமைச்சர் பதவி நீடிக்குமா என்பது கூட தெரியாமல் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்திற்கும் 120 பக்க குற்ற பத்திரிக்கையை அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவுடன் அதிலுள்ள தகவல்கள் செய்திகளில் வெளியானது. மேலும் அந்த குற்றப்பத்திரிக்கையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஓட்டுநர் நடத்துனர் பணி வாங்கி தருவதாக கூறி சிலரிடமிருந்து பெற்ற பணங்களின் விவரங்கள் அதன் மூலம் யார் யாருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது யார் யாருக்கு நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது, இந்த பணம் அனைத்தும் எங்கு சென்றுள்ளது என்ற அனைத்து விபரங்கள் குறித்த கேள்விகளை செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கான பதில்களையும் செந்தில் பாலாஜி கொடுத்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்ற விதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 


இதற்கிடையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது செய்தவுடன் அவரது பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு அவரிடம் இருந்த பொறுப்புகளை மட்டும் பறித்துக் கொண்டு அமைச்சர் பதவியை பறிக்காமல் இருந்தது. இது சரியானது அல்ல என்று தமிழக ஆளுநர் தரப்பிடமிருந்து மற்ற சில கட்சிகளின் தரப்பிடமிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தமிழக அரசு செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சர் என்ற நிலையை மாற்ற வில்லை! ஜூன் 16ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்வார் என்ற அறிக்கை வெளியிட்டதை அடுத்து இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்எல்ஏ ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்கிடையில் செந்தில் பாலாஜி அமைச்சரின் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்ததோடு அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு ஆளுநர் அதனை மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை பெற்ற பிறகு அனுப்புவதாக கூறி அந்த அறிக்கையை நிறுத்தி வைத்தார். 

இப்படி நிறுத்தி வைத்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் எம்எல்ஏ ரவி தரப்பில் இருந்து மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் எந்த தகுதியின் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார் என்பதற்கான விளக்கத்தை தர வேண்டும் என்று எஸ் ராமகிருஷ்ணன் மற்றும் அதிமுகவின் முன்னாள் எம்பி ஆன ஜெயவர்த்தன் ஆகிய இருவரும் ரிட் மனுக்களை தாக்கல் செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், தலைமை நீதிபதி எஸ்வி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்த முடிவுகளை தமிழக முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியதோடு செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தார்மீக ரீதியாக சரியானதாக ஏற்க முடியவில்லை சரியானது அல்ல என்று உத்தரவிட்டுள்ளார். 

தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த இந்த உத்தரவினை வைத்தே அடுத்தபடியாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டாலோ அல்லது ஆளுநர் இது குறித்து அடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலோ செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று தெரிகிறது. இது மட்டுமல்லாமல் திமுக தற்பொழுது இந்தியா கூட்டணி, சனாதன ஒழிப்பு போன்றவற்றை பேசி திமுக தலைமை சுத்தமாக செந்தில் பாலாஜியை மறந்து விட்டதாக செந்தில் பாலாஜி தரப்பினர் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டால் அதனையும் திமுக கண்டுகொள்ளாது என்ற விமர்சனங்கள் வேறு எழுந்துள்ளது.