உலகின் மிக பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் புதிய நாடாளுமன்றம் திறக்கும் நிகழ்வை உலகமே எதிர் பார்த்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை அரங்கேறிய அடுத்தடுத்த சம்பவங்கள் ஒட்டு மொத்த எதிர் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது இதே நிலையில் சென்றால் என்ன செய்வது என எதிர்க்கட்சிகள் புலம்பி வருகின்றனர்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க மறுப்பு தெரிவித்த நிலையில் இன்றைய தினம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அது விவாத பொருளாக மாறும் என எதிர் கட்சிகள் கணக்கு போட்டு காத்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர் பாரத வகையில் செங்கோல் விவகாரம் மக்கள் நினைவுகளை மாற்றியது.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விதமும் அதை பிரதமர் மோடி கையில் வாங்கிய பின்பு மதிப்புடன் மரியாதை கொடுத்தது, கையில் செங்கோலை வாங்கிய பின்பு நேர்த்தியாக நந்தி சிலையை சரி செய்தது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றதை புறக்கணித்தால் செய்தியாக மாறும் என நினைத்து இருந்த சூழலில்,பிரதமர் நாடாளுமன்றத்தை திறந்து வைத்ததும் செங்கோல் நிறுவியதும் மக்கள் மத்தியில் இடம்பிடித்து இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.