தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எழுந்த புகார்களால் வருமானவரித்துறையினர் கடந்த 26 ஆம் தேதி அன்று அதிகாலையில் தனது அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனை தமிழகத்திற்கு உள்ளே மட்டுமல்லாமல் தமிழகம் தாண்டி பிற மாநிலங்களிலும் நடைபெற்றது. அமைச்சரின் நெருங்கிய உறவில் இருந்த உறவினர்கள் நண்பர்களின் வீடு மற்றும் அலுவல் இடங்களிலும் இந்த ரெய்டு இன்றுவரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கரூரில் ராமகிருஷ்ண புரத்தில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்ள வந்த பொழுது அவர்களை பொதுமக்கள் போர்வைகளில் இருந்த திமுக ஆதரவாளர்கள் அதிகாரிகளை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த தாக்குதல் அதிகாரிகள் வந்த வாகனங்களை உடைக்கும் அளவிற்கு இருந்துள்ளது. மேலும் சோதனைகள் ஈடுபட வந்த பெண் அதிகாரிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது அப்படி தாக்கப்பட்டதில் பெண் அதிகாரியான காயத்ரி என்பவர் கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து மீண்டும் தனது பணியை துவங்கியுள்ளார். இந்த இரண்டு சம்பவத்திற்கும் காவல்துறையினரிடம் தரப்பிலிருந்து புகார்கள் பதிந்தாலும் மத்திய அரசின் CISF பாதுகாப்புடன் ரெய்டு தொடர்ந்து வருகிறது. வருமானவரித் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சோதனை நடைபெறும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இதில் யோசிக்க வேண்டிய விஷயம், வருமானவரித்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட போகிறார்கள் என்று திமுக ஆதரவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது ஆனால் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல்துறையினருக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் நமக்கு பாதுகாப்பு மிகவும் தேவைப்படுகிறது என்று அதிகாரிகள் மத்திய அரசிடம் புகார் வைத்துள்ளனர். இதன் காரணமாகத்தான் சி ஐ எஸ் எஃப் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் இறங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலையில் தங்களது பணிகளை செய்ய விடாமல் தங்களை தாக்கிய யாரையும் சும்மா விட போவதில்லை என வருமானவரித் துறை அதிகாரிகள் கொதித்ததன் காரணமாக, நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு விசாரணைக்கு வர வேண்டும் என தற்போது மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருமானவரித்துறை அதிகாரிகள் ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர் என்று வழக்கறிஞர் ராமச்சந்திரன் சென்னை நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் அந்த மனுவில் ஒரு முக்கியமான ஆதாரம் ஒன்றையும் அவர் குறிப்பிட்டு இருப்பது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினரை பதைப்பதைக்க வைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக உள்ள கொங்குமெஸ் சுப்ரமணி செல்வராஜ் என்பவரிடம், கூட்டமாக சென்று சோதனைக்கு ஈடுபட வந்த அதிகாரிகளை தாக்கி விட்டு அவர்கள் கைப்பற்றிய ஆவணங்கள் ரொக்கம் போன்றவற்றை பறித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிய ஆடியோ ஒன்றையும் காவல்துறையிடம் சமர்ப்பிப்போம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் வருமானவரித் துறையினரை தொடர்ந்து சிபிஐ' யும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இறங்கும் என்று தெரிகிறது.
இனி தொடர்ச்சியாக ரெய்டு மற்றும் வழக்குகள்தான் செந்தில்பாலாஜியின் வாழ்க்கையாக இருக்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.