24 special

திமுக தலையை பிய்த்து கொண்டு ஓட வைத்த ஆளுநர் ஆர் என் ரவி

R n ravi,mk stalin
R n ravi,mk stalin

திமுக அரசின் மீது ஆளுநர் எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் நடைபெற்ற கள்ளச்சாரய விவகாரமே தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்று அதனை அருந்திய கிராம மக்கள் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


பாதிப்பு ஏற்பட்ட அனைவரையுமே ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22க்கும் மேலாக கூறப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ டாஸ்மார்க் இருக்கும் பொழுது கள்ளச்சாராயம் அருந்தி அதனால் பல உயிர்கள் பறிபோனதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை பல கட்சியினர்கள் எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த சம்பவத்தில் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் பணியிடம் நீக்கம் செய்துள்ளார். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பெறுபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார் மேலும் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார். 

இந்த நிலையில் இந்த கள்ளச்சாராயம் விவகாரம் பற்றி முழு விவரங்களையும் ஆளுநர் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவரை ஆளுநர் ஆர். என். ரவி தமிழக ஆளுநராக பதவி ஏற்றதில் இருந்து தமிழக அரசிடம் எந்த ஒரு விவகாரத்தைப் பற்றி முழு அறிக்கையும் கேட்டது இல்லை,  ஆனால் இந்த கள்ளச்சாராய விவகாரம் பற்றிய முழு அறிக்கையை ஆளுநர் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக மரக்காணத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயம் மரணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.  மேலும் வருகின்ற 22 ஆம் தேதி சைதாப்பேட்டை சின்னமலையிலிருந்து ஆளுநர் மாளிகை வரைக்கும் பேரணியாக சென்று ஆளுநரிடம்  இது பற்றி மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பேரணியை தனது அறிக்கையில் வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பாலாறு தேனாறு ஓடும் என்று கூறினார்கள் ஆனால் கள்ளச்சாராயம் தான் ஆறாக ஓடுகிறது என்றும் அவ்வறிக்கையில் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழக பாஜக சார்பில் மகளிர் அணியும் களத்தில் இறங்கி போராடும் என அண்ணாமலை வேறு தனது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்த முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை பெறுபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயையும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.  ஆனால் சிகிச்சை பெறுவோரில் கள்ளச்சாராயத்தை விற்று இத்தனை உயிர்கள் போனதற்கு காரணமாக இருந்தவருக்கும்  நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பதை யோசிக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பின்பு மற்ற கட்சிகளின் நினைவூட்டலால் இந்த நிவாரணத் தொகையை ரத்து செய்தார்.

 திமுக கட்சியில் கூட்டணியில் இருக்கும் விசிக 'வும் பூரண மதுவிலக்கு விரும்புவதாகவும் மேலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக போராட்டம் நடத்தினால் அவருடன் கைகோர்க்க தயாராக உள்ளோம் என்றும் திருமாவளவன் தெரிவித்திருந்தது திமுகவிலேயே இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கூற வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அடுத்ததாக ஆளுநர் ஆர்.என். ரவியும் கள்ளச்சாரய விவகாரம் தொடர்பாக அரசு எடுத்த முழு நடவடிக்கைகளை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அமைப்புச் செயலாளர் இறையன்புவிற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே ஆளுநரிடம் திமுகவின் ஊழல் பட்டியல் மற்றும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ போன்ற விவகாரங்கள் இருக்கிறது, இந்த நிலையில் இந்த கள்ளச்சாரய விவகாரம் பற்றிய முழு அறிக்கையும் ஆளுநர் கேட்டுள்ளது திமுக மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது அனைத்தையும் வைத்து ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் அது தனது ஆட்சிக்கு பெரும் ஆபத்தாக ஏற்படும் என்பதை தெரிந்து கொண்ட திமுகவினர் ஆளுநர் கேட்டதற்கு முழு அறிக்கையை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது திமுக தலைமை தலையை பிய்த்து கொண்டு சுற்றிவருகிறது என தகவல் கிடைத்துள்ளது.