அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்குகளுக்கு ஒரு நடைமுறை இருக்கிறது. அவர்கள் ஆட்சியை இழந்ததும் அவர்கள்மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யும். அந்த வழக்கு ஆண்டுக்கணக்கில் நீதிமன்ற விசாரணையில் இருக்கும். அடுத்து ஆட்சி மாறி அவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத் துறை அந்த வழக்கை அணுகும் போக்கே மாறும். சாட்சிகள் பல்டியடிப்பார்கள். விசாரணை வேகமெடுக்கும். கடைசியில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்து விடுதலையாவார். லஞ்ச ஒழிப்புத் துறை இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது.சேம் சைடு கோல் போடும் இந்த அரசியல் சித்து விளையாட்டை அதிரடியாகத் தடுத்து நிறுத்தியிருக்கிறார் ஆனந்த் வெங்கடேஷ். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான இவரது பெயர், இதனால் அரசியல் வட்டாரத்தில் அதிகம் உச்சரிக்கப்படுகிறது.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் இவர் பொறுப்பில் வருகின்றன. இந்தப் பொறுப்பின் அடிப்படையில் இவர் முதல் அதிரடி காட்டியது, அமைச்சர் பொன்முடி வழக்கில்.விழுப்புரம் கோர்ட்டில் நடைபெறும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி 'பல்டி' அடித்தார்....தமிழகத்தில் கடந்த 2006 - 2011-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில், விதிகளை மீறி செம்மண் எடுத்ததால், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட எட்டு பேர் மீது, 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இவ்வழக்கில் தற்போது அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
அரசு தரப்பு சாட்சிகளான, ஓய்வுபெற்ற தாசில்தார், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்கள் என இருவர் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில் நேற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. நில அளவைத் துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன் சாட்சியம் அளிக்கையில், ''செம்மண் குவாரியில் நடந்த கூட்டு தணிக்கைக்கு நான் செல்லவில்லை; வழக்கின் விவரம் தெரியாது,'' என பிறழ் சாட்சியமளித்தார். நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை, இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
எத்தனை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் போல் வந்தாலும், ஆட்சியாளர்கள் தங்களுக்கு ஏற்றபடி சட்டத்தை வளைக்க முற்படுவது சரி செய்ய முடியாததாகவே உள்ளது என்பது சட்டத்துறை நிபுணர்களின் கருத்து. ஒரு ஆட்சியில் குற்றம் சாட்டி வழக்கு தொடுப்பதும், வழக்கு விசாரனைக்கு வரும் சமயம் அவர் தமது கட்சியில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக அவரை புனிதர் என்பதும் நடைமுறையாக உள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக இவர்கள் என்ன செய்து கொண்டாலும், சட்டத்தின் முன் இருந்து தப்பிக்க இவர்கள் நடத்தும் நாடகம் தான் மக்களின் முகம் சுழிக்க வைக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெடிவித்து வருகின்றனர்.