24 special

அண்ணாமலைக்கு குவிந்த கூட்டம் ....! ஆட்சிரியத்தில் திகைத்த மக்கள்...

annamalai, police
annamalai, police

பாஜக தொண்டர்கள் அண்ணாமலையை பார்க்க குவிந்த நிலையில் அங்கு முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் Z பிரிவு பாதுகாப்பில் இருக்கும் அண்ணாமலை பாதுகாப்பு செயல் இழந்த சம்பவமும் அதை தொடர்ந்து அரங்கேறிய மாற்றங்களும் தற்போது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாஜக மாநில செயலாளர் அஸ்வர்த்தமன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்தார் திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார் தொடர்ந்து திருமண மஹாலில் இருந்து கிளம்ப முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் தொண்டர்களிடமிருந்து வெளியேற முடியாமல் அண்ணாமலை திணறினார் மேலும் பாதுகாப்பு பணியில் போதிய காவலர்கள் இல்லாததால் செய்வதறியாது காவலர்களும் திகைத்து நின்றனர்.


 இந்த நிலையில் மணமக்களை வாழ்த்தி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிய பாஜக தலைவர் அண்ணாமலையை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர் வெளியேற முடியாமல் திணறிய நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் இல்லாததால்  அண்ணாமலை அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார் அப்போது அங்கு இருந்த போலீசாரிடம் ஏன் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாதா என கூறி  பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.இதனை தொடர்ந்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவரது வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் இப்படி எந்த அரசியல் கட்சி தலைவரையும் சந்திக்க தொண்டர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்தது கிடையாது இப்படி தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்து இருந்தால் முன்பே பாதுகாப்பை அதிகரித்து இருப்போம்,  சமீபத்தில் இப்படி ஒரு தொண்டர்கள் தலைவரை பார்க்க குவிந்ததை பார்ததே இல்லை நடிகர்கள் வந்தால் மட்டுமே இப்படி கூட்டம் கூடும் என காவல்துறையினரே வெளிப்படையாக பேசிய காட்சிகளும் அரங்கேறி இருக்கிறது.