24 special

மோடி தி பாஸ்.... இணையத்தில் வைராகும் வேற லெவல் வீடியோ!

PMMODI
PMMODI

முன்பு இல்லாத வளர்ச்சியில் கடந்த பத்து ஆண்டுகளில் பல துறைகளில் இந்தியா வளர்ந்து இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றமே ஏற்படுத்தியுள்ளது நம் பிரதமர் மோடியின் ஆட்சி. இந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே மட்டும் நெடுஞ்சாலைகளில் தற்போது வளர்ந்துள்ள பொருளாதார தேவைகளுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்ததில் இருந்து நீர் உள்ள இடங்களில் கூட பல கட்டமைப்புகளை ஏற்படுத்தி மேம்படுத்தியுள்ளனர். மேலும் விமான போக்குவரத்துகளிலும் பல கட்டமைப்புகளை புதுப்பித்து சரியாக மாற்றியமைத்துள்ளனர். இது போன்ற வளர்ச்சியினை இதுவரை நம் நாடு பார்த்ததே கிடையாது. இந்த ரயில்வே கட்டமைப்பில் ஏற்பட்டு கொண்டு வந்த நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினால் மிகவும் சீராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே மின்மயமாக்கல் 94% ஆக உயர்ந்துள்ளது அதுமட்டுமல்லாமல் ஆளில்லா ரயில் கிராசிங்குகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் நமோ பாரத் போன்ற உள்நாட்டு அரை-அதிவேக ரயில்களின் அறிமுகம் செய்து மக்களுக்கு பயனுள்ள வகையில் போக்குவரத்துகளை அமைத்து கொடுத்துள்ளனர்.  இதுபோல பல மாற்றங்களை நெடுஞ்சாலைத் துறையிலும், இந்தியாவின் பல்வேறு சாலைகளிலும்  மேம்படுத்தி உள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் தமிழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எக்கச்சக்கமான உள்கட்டமைப்பு  திட்டங்களில் கையொப்பமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற வகையில் பாஜக தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஆதரவழிக்கும் வகையிலும் ஏன் தாமரைக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்கு பதிலாக தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ உலா வருகிறது.அதில், வெறும் ஒன்பதே ஆண்டுகளில் 58 ஆயிரம் கோடி செலவில் 2,352 km தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. மற்றும் 3719 km புதிய சாலைகள், 105 km ஈஸ்ட் கோஸ்ட் ஹைவேகாக 3000 கோடி ரூபாய், ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை டு பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே, சென்னை மெட்ரோ பேஸ் 1, பேஸ் 2 காக 72 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை எக்மோர், கார்பாடி, மதுரை, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி போன்ற ரயில் நிலையங்களை புதுப்பிப்பதற்காக 3500 கோடி ரூபாய், 1260 கோடி ரூபாயில் சென்னை ஏர்போர்ட்டில்  New integrated terminal, சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக் தமிழ் இ எஸ் ஐ சி கோயம்புத்தூர், 11 மாவட்டங்களில் 11 புத்தம் புதிய மருத்துவக் கல்லூரிகள், தமிழ்நாட்டிற்கு என்று ஒரு பிரத்தியோகமான defense corridar, சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் ஸ்மார்ட்  சிட்டி திட்டம்!! மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கம்!! மேலும் சேலம் விமான நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு. குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுகலம். கோவில்பட்டியில் விமான ஓட்டுனர் பயிற்சி நிலையம். தஞ்சாவூர் airforce ஸ்டேஷன் போன்ற பல உள்கட்ட அமைப்பு விஷயங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என்று ஒரு இளைஞன் கூறியுள்ளார். இதனால் மூன்றாவது முறையாக நம் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு பிறகு இன்னும் பல இன்ட்ரெஸ்ட்ரக்சர் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொடுப்பார் என்பது உறுதியென பல கமெண்ட்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும் பலர் இதனை பகிர்ந்து வருவதால் திமுகவிற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.