24 special

பொள்ளச்சியில் பாஜகவுக்கு சாதகம்.. வெளியானது சூப்பர் சர்வே..!

MKSTALIN, VASANTHARAJAN
MKSTALIN, VASANTHARAJAN

தேர்தல் களப்பணிகளில் பாஜக கட்சி தமிழகத்தில் வேகமெடுத்துள்ளது. இதனால் பொள்ளாச்சி மக்களவை தேர்தலில் பாஜக முன்னிலையிலும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சுணக்கமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது இரு பெரிய கட்சிகளுக்கும் பெரும் சிக்கலாக அமைத்துள்ளது.நாடளுமன்ற தேர்தலை பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்கின்றன. பாஜக சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜகவை சேர்ந்தவர்கள் பெருமபான்மை தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதிகளிலும், பாஜக மத்திய இணை அமைசர் எல் முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். கோவை மேற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் அவர்கள் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.


பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று அதிமுக- திமுக கட்சிகள் நினைத்து வந்ததாம்.அப்படி தான் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்தராஜனை வீழ்த்திடலாம் என்று திமுக அமைச்சர் சக்கரபாணி பரிந்துரையின் பேரில் திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி என்பவர் போட்டியிடுகிறார். இவர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அதிமுக தரப்பில் கார்த்திக் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக- திமுக இரு கட்சிகளும் வெற்றி பெறுவதற்கு சாதகமாக இருக்கும் என்ற நினைக்க தொடங்கியதாம். வேட்பாளர்கள் அறிவித்தவுடன் ஆரம்பத்தில் தனியார் சேனல் ஒன்று கருத்துக்கணிப்புகள் நடத்தியது அதில், திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 60000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் இதனால் அங்கு சூரியன் தான் உதிக்கும் என்று பேசப்பட்டது . 

அப்போது அதிமுக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பாளர் குறித்து போலாழ்ச்சியில் அதிமுக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். இதனால் பாஜக வேட்பாளருக்கு சாதகமாக இல்லை என்று இரு பெரிய கட்சிகளும்நினைக்க. வேட்பாளராக வசந்தராஜன் அறிவித்த உடன் அவரது தேர்தல் பணிக்கான செய்லபாடுகள் மக்களிடத்தில் மாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வசந்தராஜன் மக்கள் இடத்தில் பெயர் பெற்று வருகிறார். தஹ்ரபோது திமுக - பாஜக இரு கட்சி வேட்பாளர்களும் ஒரே மட்டத்தில் இருப்பதாகவும் அதிலும் திமுகவை விட ஒரு படி மேலே பாஜக வேட்பாளர் இருப்பதாக சமீபத்தில் நடந்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இன்னும் இரண்டு வார்தத்தில் பாஜக வேட்பாளர் முன்னிலை பெறுவார் என்றும் அந்த கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.பாஜக வெற்றி வாய்ப்பு தொகுதியில் பொள்ளாச்சியும் தற்போது இணைந்துள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மாறாக, திமுகவும் வெற்றி பெறவேண்டும் என்று தீவிரமாக வேலைகளை செய்ய ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் இரு முனை போட்டியாக மட்டுமே பொள்ளாச்சியில் இருக்கிறதாம். மேலும், பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவதர்க்கான வாய்ப்புகள் அதிகப்படியாக இருப்பதாக பொள்ளாச்சி பாராளுமன்ற மக்கள் கூறுகின்றனர். ஏனெனில் அவர் அந்த தொகுதியின் மிக பெரிய பிரச்சனையான குப்பை கிடங்கு மற்றும் ரயில்வே வசதி போன்று பல்வேறு வசதிகளை சீரமைத்து கொடுத்துள்ளாராம். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே இப்படி செயல்படுபவர் வெற்றி பெற்றால் இன்னும் தாராளமாக செய்வார் என்று மக்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.