பிரதமர் மோடியின் காலில் பப்புவா நியூ கினி நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் விழுந்து ஆசீர்வாதம் வாங்க உடனடியாக பிரதமர் மோடி அவரை தடுத்து நிறுத்தி தோளில் தட்டி கொடுத்து அரவணைத்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
எப்போதும் வேறு நாட்டு தலைவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்காத ஜேம்ஸ், இந்திய பிரதமர் மோடி சிறந்த நேர்மையான தலைவர் என்ற காரணத்தால் தனது மரியாதையை செலுத்தும் விதமாக செயல்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இது மிக பெரும் ஆச்சர்யத்தை கொடுக்க பிரதமர் மோடியை பற்றி தற்போது அமெரிக்க அதிபர் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் உலக அளவில் இந்தியர்களுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இருக்கும் மதிப்பை வெளிக்காட்டி இருக்கிறது.
ஜி-7 கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் பிரதமர் மோடியின் ஆட்டோகிராஃப் கேட்டிருக்கிறார், "என்ன மோதி ... இவ்வளவு பிரபலமா இருக்கறீங்க? அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு உங்களை விருந்தினராக அழைத்திருக்கிறோம் அதில் பங்கெடுக்க எங்கள் நாட்டில் ஒரே போட்டா போட்டி. எங்களால் யாரை தேர்வு செய்வது என சமாளிக்க முடியவில்லை உங்கள் ஆட்டோ கிராஃப் வேண்டும் எனக்கு" என்று கூறி இருக்கிறார்.
உலக நாடுகளின் தலைவன் என தன்னை முன்னிலை படுத்திகொண்ட அமெரிக்காவை சேர்ந்த அதிபர் ஒருவர் இந்திய பிரதமரிடம் ஆட்டோ கிராப் வேண்டும் என கேட்டு இருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது.
இதே போல் ஜி-7 மாநாட்டிற்கு வந்த ஆஸ்திரேலிய பிரதமரும், "உங்களுக்காக ஸ்டேடியம் ஏற்பாடு செய்திருக்கிறோம். கூட்டம் அலைமோதுகிறது புக்கிங் செய்யும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை" என்று அவரும் ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் மோடிக்கு உள்ள வரவேற்பு குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஒரு காலத்தில் உலக அரங்கில் பொம்மையாக இருந்த இந்திய பிரதமர்கள் மத்தியில் தற்போது இந்திய பிரதமர் மோடியின் புகழ் வல்லரசு நாடுகளுக்கு மட்டுமல்ல பப்புவா நியூ கினி போன்ற நாடுகளின் பிரதமர்களுக்கும் தெரிந்திருக்கிறது என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .