சமீப காலமாக ஆளும் அரசின் அதாவது திமுகவிலேயே அமைச்சரவை மாற்றம் நடைபெறும் வகையில் பாஜக திமுக'விற்கு சிக்கல் ஏற்படும் வகையில் பல குற்றங்களை எடுத்துரைத்து வருகின்றது. மேலும் ஆளுநருக்கு திமுகவிற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது இந்த நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தமிழக அரசை திரும்பி போடும் வகையில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் செயலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அச்சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குகிறது தமிழக அரசு ஆனால் இன்னும் சில தமிழக குடும்பங்களில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு நகை கடன்களை பெற்று வருகின்றனர் என்று திமுக அரசை சீமான் சாடி இருந்தார். இப்படி எங்கு பார்த்தாலும், எந்த கதவை திறந்தாலும் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பாஜக மற்றுமொரு படியாக ஆளுநரிடம் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
மேலும் இந்த புகார் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதன்படி தமிழகத்தில் கள்ளச்சாராயத்தின் விளைவாக 22 பேர் உயிரிழந்துள்ளனர் இதற்கு காரணமாக இருந்த சாராய வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு செஞ்சி மஸ்தானை பதவி நீக்கம் செய்யும்படி முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்ததாக அண்ணாமலை பதிவிட்டு இருந்தார்.
அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்காமல் தனது கடமையில் இருந்து தவறி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி லஞ்சம் பெற்று பண மோசடி ஈடுபட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை எதிர்கொண்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம் என்று அந்த புகாரில் ஆளுநரிடம் தெரிவித்ததாக அண்ணாமலை தனது கருத்தை ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
விழுப்புரம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராய விவகாரத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் புகார் தெரிவித்து வந்த அன்று மாலையிலே தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பாக கள்ள சந்தையில் விற்கப்பட்ட மதுக்களை வாங்கி குடித்து ஒருவர் மரணம் அடைந்து மற்றொருவர் தீவிர சிகிச்சையில் இருந்து பிறகு இறந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழக மக்களுக்கு அரசு நடத்தும் டாஸ்மார்க்கிலேயே போலி மதுபானங்கள் விற்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இருவரின் உயிர் பறிபோகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, போலி மதுபானத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமைகள், டாஸ்மார்க் நிறுவனத்தினர் மற்றும் இந்த துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து டாஸ்மாக் முன்பும் போராட்டம் நடத்தப்பட வேண்டுமா என்பதை முதல்வர் யோசித்து தனது முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அண்ணாமலை.
கள்ளச்சாராயத்தால் 22 பேரின் உயிர் பறிபோனத்திற்கு பிறகு கள்ளச்சாராயத்தை முழுவதுமாக ஒழித்து விட்டு இனி எங்கும் தலை தூக்காது என்று டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தனர். ஆனால் இவர்கள் இந்த உறுதியை கூறிய ஒரு வாரத்திற்குள்ளே மற்றுமொரு சம்பவமாக போலி மதுபானத்தால் இருவர் உயிரிழந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து ஆளுநர் மாளிகை அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இரு தினங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிகிறது.