24 special

வரலாறு காணாத மழை தத்தளிக்கும் தென்மாவட்டம்! எங்கே கனிமொழி?

Thoothukudi Rain
Thoothukudi Rain

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இந்த மாதம் சென்னையில் இரண்டு நாட்கள் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே தத்தளித்தது. இது தான் இந்த ஆண்டிற்கான சேதாரம் என நினைத்த நிலையில் தற்போது தென் மாவட்டத்தில் மழை புரட்டி போட்டு வருகிறது. 


தென்கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. ஏற்கனவே தன மாவட்டங்களில் மழை பொழியும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில், கடுமையான மழை வரக்கூடும் என அறிவிக்க தவறிவிட்டதாக தென் மாவட்ட மக்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. மேலும் சில கன்மாய்கள், ஓடைகள் உடைந்துவிட்டன. தண்ணீர் வெளியேறும் கால்வாய்களும் சாதாரண மழைக்குத்தான் தண்ணீரை வெளியேற்றும் என்றும் தற்போது பெய்யும் பேய் மழையால் ஏற்படும் வெள்ளத்தை வெளியேற்றும் திறன் அந்த சிறிய கால்வாய்களுக்கு இல்லை என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காயல்பட்டினத்தில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்துள்ளதாகவும் தெரிவிகின்றனர். இதனால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள ஏரிகள், குளம் ஆகியவை நிரம்பி கன்மாய்கள் உடைந்து வெள்ளம் நீர் மக்கள் வசிக்கும் பகுதியில் சுளுந்துள்ளதால பலர் சிக்கியுள்ளனர். தாமிரபரணி ஆறும் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

தற்போது வானிலை மையம் மேலும் ஒரு நாள் வரி தென்காசி, நெல்லை, குமாரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்ததால் மக்கள் செய்வ தெரியாமல் சிக்கி வருகின்றனர். மேலும் பலர் தேவையான உடமைகளை எடுத்துகொண்டு வீட்டை வீட்டு வெளியேறி பள்ளி, மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நேரத்தில் மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை வைக்கின்றனர். பலரது வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இப்படி தென் மாவட்டமே தத்தளிக்கும் நேரத்தில் அந்த தொகுதியின் எம்பி கனிமொழி எங்கே சென்றார் என கேள்விகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க வரும் கனிமொழி போன்ற அமைச்சர்களை மக்கள் சிக்கி தவிக்கும் நேரத்தில் வெளியில் வராமல் அவர்களை பாதுகாப்பாக சென்னையில் உள்ளனர் எனவும் மக்கள் இணையத்தில் வன்மத்தை தெரிவிக்கின்றார். குறிப்பாக கனிமொழி அவர்கள் டீவீட் மூலம் உதவி எண்களை அறிவித்து இருக்கிறேன் என்பது போல் செயல்பட்டுவிட்டார் என திமுகவினர் கொண்டாடுவது சரியானது அல்ல என பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர்.