24 special

திருமாவளவனை வைத்து பேரணியை முடக்க பார்த்த திமுக.... பட்டியலிட மக்களை ஒன்றிணைக்கும் பா ரஞ்சித்..

thirumavalavan,mkstalin
thirumavalavan,mkstalin

கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் தீயாக எரிந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தமிழ் திரை உலகின் இயக்குனர் பா ஆரஞ்சி எடுத்துள்ள நடவடிக்கை திமுகவை தூக்கம் இழக்க வைத்துள்ளது.  ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 11 பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லும் பொழுது தப்பி ஓட முயன்றதாக திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு சமூக வலைதளங்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தது ஏனென்றால் குற்றவாளிகள் தாமாக சரணடைந்த பொழுது எப்படி அவர்கள் தப்பிச் செல்ல முற்படுவார்கள் அவர்களிடம் எப்படி கை துப்பாக்கிகள் கிடைத்தது என்று பாஜக தரப்பில் கடுமையான கேள்விகள் முன்வைக்கப்பட்டது அதற்கு போலீஸ் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை! 


இதனை அடுத்து ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கூலிக்கு வேலை பார்ப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட இதனை திருமாவளவன் ஆதரித்து திமுகவிற்கு தனது கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் சிபிஐ தலையிட முடியாத அளவிற்கு திமுக தனது செயல்களை செய்து வந்தது. ஆனால் தலித் மக்களின் குரலாக ஒழித்து வந்த ஒரு தலைவர் இப்படி வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார் இதன் மூலம் எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று தலித் மக்களின் குரலாக பா ரஞ்சித் பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தார் அதிலும் குறிப்பாக திமுக ஆட்சி குறித்தும் திமுக கட்சி குறித்தும் தனது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஞ்சித் 2026 பொது தேர்தலில் எனது முடிவை மாற்ற வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது என்று கூறினார் இது திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதுமட்டுமின்றி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் இதன் மூலம் தலித் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பா.ரஞ்சித் கலந்துக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியான பொழுது  திருமாவளவன் திடீர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் சிலர் காசுக்காக இதுபோன்ற பேரணிகளை நடத்துகிறார்கள் அந்த பேரணியில் நம் கட்சியினர் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று இயக்குனர் ரஞ்சித் கலந்து கொள்ள இருக்கும் பேரணி குறித்து அவதூறுகளையும் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் கலந்து கொள்ள கூடாது என்பதையும் வலுவாக முன்வைத்தார். 

இது பெருமளவில் பரபரப்பானது இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் ரஞ்சித் அந்தப் பேரணிகளை தலைமையேற்று நடத்தி முடித்தார். மேலும் நீங்கள் எங்களை பயமுறுத்தலாம் உங்கள் கட்சியில் சேர்ந்து எம்எல்ஏக்களாக ஜெயித்த அடிமைகள் நாங்கள் கிடையாது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும் சென்னை ஒரு மேயர் இருக்கிறார். திமுகவில் இருப்பதால் அந்த அம்மா மேயர் கிடையாது இட ஒதுக்கீடு என்ற வார்த்தையினால் அவர் மேயராக்கப்பட்டார், அம்பேத்கர் வாங்கி கொடுத்த இட ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் தான் உங்கள் அனைவருக்கும் பதவி கிடைத்தது

எத்தனை பட்டியலில் எம்எல்ஏக்கள், எம்பிகள் இருக்கிறீர்கள் அவர்கள் ஏன் ஆம்ஸ்ட்ராங் மரணத்தை வந்து பார்க்கவில்லை அப்படி என்ன உங்களுக்கு பயம் நீங்கள் ஒன்று திரள முடியாதா? உங்களை கட்சி கட்டுப்படுத்துகிறதா? என்று திமுகவின் கட்சியில் பட்டியலில் எம்எல்ஏ எம்பிகளாக உள்ளவர்களிடம் கடுமையான கேள்விகளையும் எழுப்ப திருமாவளவனையே எங்களுக்கு எதிராக திருப்புகிறீர்கள் என்று திமுகவின் ஸ்கெட்சை கணித்து பதிலடி கொடுத்தார் பா ரஞ்சித். இது திமுகவை ஆட்டம் காண வைத்துள்ளது.மேலும் இந்த பேரணி பிரமாண்டமாக நடந்ததற்கு திருமாவளவனுக்கு அறிவாலய தரப்பில் இருந்த்து கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது...