24 special

ஆச்சிரியங்களை நிகழ்த்தும் பர்வத மலை

sivan
sivan

ஆச்சிரியங்களை நிகழ்த்தும் பர்வத மலை நம் தமிழகத்தில் மகாதேவமலை, கொல்லிமலை சுருளி மலை, பொதிகை மலை, வெள்ளையங்கிரி மலை, சதுரகிரி மலை என புகழ் பெற்ற சித்தர்கள் மலைகள் பல உள்ளது. அந்த மலைகளைப் போன்றே சுமார் 4560 அடி உயரம் கொண்ட மலையாக பிரசித்தி பெற்றதாக கருதப்படுகின்ற ஒரு மலைதான் பர்வதமலை! இந்த மாலை ஒரு சிவ தனமாகும்,, இந்த மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கசலப்பாக்கம் வட்டத்தில் தென் மகாதேவ மங்கலம் என்ற கிராமத்தை ஒட்டி 5,000 மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலை பற்றி பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் என்ற பாடலை எழுதிய பெருங்கௌசிகனார், நன்னன்சேய் நன்னன் என்று குறுநில மன்னரை பற்றி பாடும் பொழுது நவிர மலை என குறிப்பிட்டுள்ளார் நவிரம் என்றால் மலை என்றும் மூங்கில் செழித்து வளர்ந்த சிவனின் தளமான பர்வத மலையை தான் குறிப்பிடுகிறது.


மேலும் வட மாநிலத்தில் உள்ள கைலாயத்திற்கு புனித பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த தளத்திற்கும் வந்து சிவபெருமானை வழிபட்டு சென்றால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்றும் பர்வத மலையில் அமைந்துள்ள சிவதனத்தில் ஒரு நாள் தங்கி விளக்கேற்றினால் 365 நாட்களும் அங்கு விளக்கேற்றியதற்கு சமம் அதற்கு இடான பலனை சிவன் அருள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் அம்பிகை ஒருமுறை சிவனிடம் இந்த பூவுலகில் பிறந்த மனித உயிர்கள் அனைவரும் அறம் பொருள் இன்பம் வீடு பேரு ஆகிய நான்கையும் ஒருசேர பெறுவதற்கு எங்கு வழிபட வேண்டும் அவர்கள் இந்த நான்கையும் பெறுவதற்கு வழிபட வேண்டிய தளம் எது என்று கேட்டுள்ளாள், அதற்கு சிவன் அடையாளம் காட்டிய இடமாகவும் இந்நான்கையும் மனிதர்கள் பெறும் இடமாகவும் கருதப்படுவது இந்த பர்வத மலையே... அதன் காரணமாகவே அன்னை பார்வதியின் திருப்பெயரைக் கொண்டு பர்வதமலை என்று இம்மலை போற்றப்படுகிறது.

மேலும் பர்வத மலைக்கு நவிர மலை, தென் கைலாயம், திரிசூலகிரி, சஞ்சீவி கிரி, பர்வத கிரி, கந்தமலை, மல்லி காஜனமலை என்ற பல பெயர்கள் உள்ளது. சரி எப்படி இந்த மழை உருவாகியது என்று புராண கதைகளில் பார்க்கும் பொழுது பிரம்மதேவரும் திருமாலும் தம்மில் யார் உயர்ந்தவர் என்ற போட்டியை நிகழ்த்த அவர்களின் கர்வத்தை அடக்க சிவபெருமான் விஸ்வ ஜோதியை வடிவமாக கொண்டு தன்னுடைய முதல் அடியை இந்த பர்வத மலை மேல் வைத்து பிறகே திருவண்ணாமலையில் வைத்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பர்வதமலையில் சிவபெருமானின் பாதவடிகளை பிரதிஷ்ட்டை செய்து பூஜித்து வருகிறார்கள். மேலும் இந்த மலை உருவாவதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது, அதாவது சஞ்சீவி மலையை அனுமான் தூக்கிக் கொண்டு வந்த போது அதன் ஒரு பகுதி கீழே விழுந்து உருவானது தான் இந்த பர்வதமலை என்றும் அதன் காரணமாகவே இதற்கு சஞ்சீவி மலை என்ற மற்றொரு பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


பொதுவாக இந்த மலையில் உள்ள சிவனை வருடத்தில் எந்த நாட்களிலும் தரிசிக்கலாம் என்றும் மாலையில் மலையேற ஆரம்பித்து இரவு முழுவதும் மழையில் தங்கி பிறகு அதிகாலை சிவனை வழிபட்டு மலை இறங்குவதை இங்கு வரும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்த மழையில் அற்புதமான மற்றும் அதிசயமான மூலிகைகள் பல இருக்கிறதாகவும் சித்தர்கள் பலர் வாழ்ந்த குகைகளும் அந்த குகைகளில் சித்தர்கள் தற்போதும் வந்து தவம் செய்து கொண்டிருப்பதை பக்தர்கள் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மழையை ஏறுவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல ஏனென்றால் செங்குத்தான பாறை, பாழடைந்த கோட்டையின் சுவர்கள், இரண்டு பக்கமும் காணப்படுகின்ற பாதாள பள்ளத்தாக்கு என அனைத்தையும் தாண்டியே பர்வத மலையின் உச்சியில் உள்ள சிவபெருமானையும் அம்பாளையும் தரிசிக்க முடியும் என்று கூறுகிறார்கள். மேலும் இன்றுவரை தமிழகத்தில் சித்தர்கள் நடமாடும் ஒரு முக்கிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று எனக்கூறப்பட்டுகிறது...