
வாகை சுடவா என்னும் திரைப்படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் இந்த ஜிப்ரான்!! இதைத்தொடர்ந்து இவர் குட்டி புலி, ரன் ராஜா ரன் மற்றும் நையாண்டி போன்ற போன்ற திரைப்படங்களுக்கும் அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்திலும் இசையமைத்து வந்தார். திரைப்படங்களில் 50ம் மேல் இசையமைத்து வந்தாலும் கூட 800ம் மேற்பட்ட விளம்பரங்கள் போன்றவற்றிற்கு இசையமைத்து வந்துள்ளார். இவர் இசை அமைத்த திரைப்படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று, குட்டி புலி மற்றும் ராட்சசன் போன்ற திரைப்படங்களின் இசைகள் மிகவும் சூப்பராக அமைந்து அனைவரின் வரவேற்பையும் பெற ஆரம்பித்தது. இவ்வாறு தனது பணியினை தொடர்ந்து செய்து வந்த ஜிப்ரான் தற்போது குரங்கு பெடல் என்னும் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் திரையில் வெளியானதை ஒட்டி அந்த திரைப்படத்தில் அவரின் பெயர் ஜிப்ரான் வைபோதா என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பற்றி ஜிப்ரான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது என்னவென்றால்!!!
என்னுடைய தந்தை பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா என்பதாகும். வைபோதா என்றால் விழித்தெழுதல் என்று பொருள். கடந்த சில காலமாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்து அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக மீண்டும் இந்துவாகி விட்டதாக கூறியிருந்தார். மேலும் சட்டபூர்வமாக அனைத்தையும் மாற்றிவிட்டதாகவும் இதன் காரணமாகவே சித்ரா என்ற தனது பெயருடன் தந்தையின் பெயரையும் இணைத்து குரங்கு பெடல் திரைப்படத்தில் டைட்டில் கார்டில் ஜிப்ரான் வைபோதா என்று தனது பெயரினை போட்டதாகவும் பேட்டியில் கூறியிருக்கிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு முன்னரே திரையுலகத்தில் உள்ள பல பிரபலங்கள் அவர்களின் மதங்களில் இருந்து மாறி தற்போது இந்து மதத்தினை பின்பற்றி வருகின்றனர். பிரபல நடிகரான விஜயின் தந்தை சந்திரசேகர், லிவிங்ஸ்டன் போன்ற பிரபலங்கள் கூட தற்போது இந்து மதத்தை பின்பற்றி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் சமீபத்தில் கூட லிவிங் ஸ்கேன் ராமர் கோவிலுக்கு சென்று எனக்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் பிரபல நடிகைகளான தமன்னா, சமந்தா போன்றவர்கள் கூட ஹிந்து மதத்தை பின்பற்றி அதிக அளவில் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டு பல கோவில்களுக்கு தொடர்ந்து சென்று பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது போன்று தொடர்ந்து ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட பல சினிமா பிரபலங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் சிலர் தங்களின் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு தற்போது மாறி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளரான ஜிப்ரான் மதம் மாறி இருப்பதை பார்க்கும் பொழுது இடதுசாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே லிவிங்ஸ்டன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் பிற மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய விவகாரம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது இசையமைப்பாளர் ஜிப்ரானும் இப்படி இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியது பேசுபொருளாக மாறியுள்ளது...மேலும் இவரை குறிவைத்து இப்பொழுது இணையத்தில் அவரது பழைய சேர்ந்தவர்கள் மிகவும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த விமர்சனங்கள் மற்றும் அது தொடர்பான கருத்துக்கள் இணையத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது...