24 special

கைவிட்டு போகும் முரசொலி அலுவலகம்..? முதல் சறுக்கலை சந்தித்த திமுக!

Stalin, Vijayakanth
Stalin, Vijayakanth

தேமுதிக தலைவரும் சினிமா துறையை சேர்ந்தவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தி அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்து 13 நாட்கள் நிறைவடைந்த நிலையில் விஜயகாந்த் மூலமே தற்போது ஆளும் முதமலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி பிள்ளையார் சுழி போட்டுள்ளதாக கூறப்படுகிறது.


விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் கோயம்பேடு நூறடி சாலையில், 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இருந்தது. இந்த இடத்தை பாலம் கட்டத் தேவைப்படுவதாக கருணாநிதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்த விஜயகாந்த் கருணாநிதியிடம் கெஞ்சி அதற்கு மாற்று வழியையும் சொன்னார் ஆனால் விஜயகாந்த்தின் கோரிக்கையை கொஞ்சம் கூட பொருட் படுத்தாமல் மண்டபத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டது. இந்த பகையை மனதில் வைத்தே, திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி போட்டு, திமுக சரித்திரத்தில் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்தார்.  இந்த பகையை மனதில் வைத்தே,  கடைசியாக நடந்த தேர்தலில் கூட கூட்டணி வைக்கவில்லை.

அந்த மண்டபத்தின் ஒரு பகுதி கிடைத்த நிலையிலும் விஜயகாந்த் மறுபகுதியை சீரமைத்து கட்சி  அலுவலகமாக செய்லபடுத்தினார். அதன் பின்னும் அந்த மண்டபத்தை முழுமையாக இடிக்க உத்தரவிட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டம் தீட்டினர். ஏற்கனவே உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது அந்த மண்டபத்தை முழுவதுமாக இடிக்க சொன்னதும் இதை கேட்ட விஜயகாந்த் மொத்தமாக மனசு உடைஞ்சி போய்விட்டாராம். தனது தாய் தந்தை பெயரில் ஆசை ஆசையாக கட்டிய மண்டபம், அதுமட்டுமா? இந்த மண்டபம் தேமுதிக என்ற கட்சிக்கு அடையாளம் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் அவர் இறந்து 13 நாட்கள் கடந்த நிலையில், முரசொலி அலுவலகம் அமைத்திருப்பது பஞ்சமி நிலம் என்பதும் அதனை பட்டியலின மக்களுக்கு கொடுக்கவேண்டும் என ஆதாரத்துடன் பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த புகாரின் பேரில் அதனை விசாரித்த நீதிமன்றம் முரசொலி பட்டியலின ஆணையம் விசாரிக்க உத்தரவிட்டது. ஏற்கனவே திமுக தரப்பில் ஆர்.எஸ் பாரதி அந்த வழக்கை விசாரிக்க தடை கோரி மனு தொடுத்தார் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதே திமுகவிற்கு பெரிய சருக்கலாக அமைந்தது. 

இதற்கெல்லாம் ஒரே காரணம், விஜயகாந்தை அப்போது முதலமைச்சராக இருந் கருணாநிதி செய்த துயரமே இப்போது விஜயகாந்த் மறைந்த பிறகு ஸ்டாலின் அந்த பழிச்சுமை அனுபவிக்க போகிறார் அது முரசொலி அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்க போகிறது விஜயகாந்த் இறந்த 13வது நாளிலே பெரிய அடி ஸ்டாலினுக்கு விழுந்துள்ளது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.