
தமிழகத்தில் உள்ள மக்கள் விடுமுறை நாட்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தாண்டி தமிழகத்தில் பல இடத்திலும் சுற்றுலா வசதிகள் உள்ளன. இந்தநிலையில் தமிழகத்தில் புரியாத புதிராக உள்ள இடம் குறித்து இதில் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு இடத்திலும் விசித்திரமான செயல்கள் நடப்பது புரியாதவையாக இருக்கும். அது இயற்கையாக நடக்ககூடியதா அல்லது அறிவியல் சார்ந்து நடக்கிறதா என்பது நமக்கு புரியாமலே இருக்கும்.
இந்த உலகம் பல விசித்திரம் நிறைந்தது, நமது அருகில் நடக்கும் ஒரு செயல் கூட விசித்திரமாக அமைந்திருக்கும் அதனை நாம் அறிந்துகொள்ள பல நாட்கள் கூட ஆகலாம். அந்த வகையில் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடக்கும். நாகப்பட்டினம் அருகே உள்ள க்கல் முருகன் கோவிலில் வருடம்தோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா நடக்கும். 6ம் நாள் நடக்கும் விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது, சூரனை வதம் செய்ய முருகன் புறப்படும் முன்பு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கும் ஒவ்வொரு ஆண்டும் அந்த நிகழ்ச்சி நடக்கும்போது முருகன் உற்சவம் சிலையில் முத்து முத்தாக வியர்வை சொட்டுவதைப் பார்க்க முடியும். இது எப்படி நாடாகும் என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கின்றது. சிலர் இது பன்னீர் துளிகள், என்றும் சிலர் இது பூமாலையில் உள்ள நீர்த் துளிகள் எனவும் கூறி வருகின்றனர்.
அதேபோல், தஞ்சை பெரிய கோவில் பற்றி தெரியாதவர்கள் யாரும் கிடையாது இன்னும் அந்த கோவிலில் உள்ள கோபுரத்தில் உச்சியில் உள்ள அந்த அதிக எடை கொண்ட உருவத்தை எப்படி மேலே அமைத்தனர் என்பது புரியாமலே உள்ளது. ராஜராஜன் சோழன் கட்டிய இந்த கோவில் தான் தமிழகத்தின் பெருமை மிகுந்த ஒரு அடையாளமே. இந்த கோவிலில் உள்ள ஒரு சிற்பம் குறித்த மர்மம் இன்றும் இருக்கிறது. இந்தியாவிற்குக் கப்பலில் முதலில் வந்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாறு கூறுகிறது. இவர் 1498ம் ஆண்டு இந்தியாவிற்குக் கேரள பகுதி வழியாக வந்தார். ஆனால் இந்த கோவில் அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள சிற்பத்தில் பிராஞ்சு அரசர் ராபர்ட் மற்றும் ஒரு சீன மனிதனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மையில் அவர்கள் உருவம் தானா எனத் தெரியவில்லை ஆனால் அவ்வாறான பேச்சே இன்றும் இருக்கிறது. போக்குவரத்தே வளர்ச்சி பெறாத காலத்தில் ரஷ்ய மன்னர் குறித்து சீன மனிதர் குறித்து எப்படி தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும் என்பது ஆச்சரியமாகத் தான் உள்ளது. இது தமிழகர்களுக்கு பெருமை என்றாலும் இது குறித்து தகவல் புரியாத புதிராகவே உள்ளது.
அடுத்ததாக ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ராமர் சேது பாலம் என கூறப்படுகிறது. ரமயணம் தொடர்பாக எழுதிய புத்தகத்தில் அப்போது, சீதையைத் தேடி இலங்கைக்குச் சென்ற ராமன் வானரங்களை வைத்து ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் கட்டினார். இந்த பாலம் தான் ராம் சேது பாலம் என அழைக்கப்படுகிறது. இந்தப்பாலம் நீருக்கடியில் இன்றும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பாலம் தொடர்பாக யாரும் விளக்கம் கொடுக்கப்படவில்லை. சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படத்தில் கூட ராமர் வானகரத்தை கொண்டு அங்கு பாலம் அமைப்பது போல் இருக்கும் இதுவரை அந்த காட்சி உண்மையா இல்லை கற்பனையா என்று தெரியவில்லை.