24 special

என்னது செந்தில் பாலாஜிக்கு இவ்வளோ பெரிய பங்களாவா

Senthil balaji,
Senthil balaji,

நேற்றைய தினம் வருமான வரித்துறை சத்தமில்லாமல் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்திய செய்திகள் வெளியான நிலையில் இன்றைய தினம் அது குறித்து வெளிவரும் தகவல்கள் உண்மையில் செந்தில் பாலாஜி பெரிய வலையில் சிக்கிவிட்டதாக உறுதி படுத்தி இருக்கிறது.


கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் உறவினர்களால் கட்டப்படும் மிக பெரிய பங்களா குறித்து பல்வேறு யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன, கரூர் ரகசிய பங்களா கட்டுமான பணிகள் யாரும் பார்த்திராத வகையில் சுற்றி சீட் அடிக்கப்பட்டு ரகசியமாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சிறு புகைப்படம் கூட வெளியே செல்லாமல் ரகசியமாக இருந்த பங்களாவை சோதனை செய்யவேண்டும் என, பலரும் வருமான வரிதுறைக்கு புகார் கொடுத்து வந்தனர், இந்த நிலையில் தான் அதிரடியாக மூன்று வாகனங்களில் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் புதிய பங்களாவில் சோதனையில் ஈடுபட்டனர், பங்களா கட்ட பணம் எங்கு இருந்து வந்தது, யார் உரிமையாளர் முறையாக பண பரிமாற்றம் நடைபெற்று இருக்கிறதா? என முழுவதும் ஆலோசனை செய்தனர்.

முதல் முறையாக பங்களாவை பதிவு செய்ய ஊடகத்துறையினருக்கு அனுமதியும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பங்களா காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

வழக்கமாக வருமான துறையினர் சோதனை என்பது அதிகபட்சம் 2 நாட்கள் நடைபெறும் முதல் இரண்டு நாட்களில் ஏதாவது ஆவணங்கள் சிக்கினால் மட்டுமே தொடர்ச்சியாக வருமான வருத்துரை சோதனை நடைபெறும் அந்த வகையில் டாஸ்மார்க் மேலாளர் தொடங்கி  துணை மேயர், மேயர் என ஒருவரையும் விடாமல் சல்லடை போட்டு வருமான வரிதுறையினர் நடத்திய சோதனையில் சுமார் 100 கோடி அளவிற்கு பரிவர்த்தனை நடந்தது கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் சோதனைகள் முடிவு செய்யப்பட்டு, வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட முழு விவரமும் அறிக்கையாக கொடுக்க வருமான வரித்துறை தயாராகி விட்டதாம். எனவே வரும் நாட்களில் மிக பெரிய அளவில் பின் விளைவுகள் இருக்கும் என அடித்து கூறுகின்றனர் வருமான வரித்துறை வட்டாரங்கள்.