உத்திரபிரதேசம் : உத்திரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சியமைத்தபிறகு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வ வருகின்றனர். 2016க்கு முன்னர் கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசம் என மாநிலமே அச்சத்தில் மூழ்கியிருந்தது. காவல்துறை அதிகாரிகள் கூட ரவுடிகளின் வேட்டையில் பலியாகினர்.
தற்போது யோகியின் ஆட்சியில் ரவுடிகளுக்கு சொர்க்கத்தில் இடம் அளிக்கப்பட்டு வருவதால் சமூக செயல்கள் வெகுவாக குறைந்திருப்பதுடன் ரவுடிகள் தொடர்ந்து சரணடைந்துவருகின்றனர். இதனிடையே கடன்டன 2016ல் சஹஸ்புரில் NIA அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையில் மூன்றுபேர் நிரபராதிகள் என கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016 ஏப்ரல் 2 அன்று நள்ளிரவில் பிஜினோர் மாவட்டம் சயாஹோராவில் நடந்த திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு தன்சில் அஹம்மது பார்சானா தம்பதியினர் சஹாஸ்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது காரை மடக்கிய கும்பல் தம்பதியினரை சுட்டுக்கொன்றனர். தன்சில் அஹம்மது NIA அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிகாரியின் பக்கத்துவீட்டுக்காரர்களான முனீர், ரேயான், ஜெய்னி, தஞ்சிம் அஹம்மது, ரிஷ்வான் ஆகியோருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.
கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி முனீர் மற்றும் ரேயானை குற்றவாளிகள் என கூறி மரணதண்டனை விதித்ததோடு ஜெய்னி, தஞ்சிம்,ரிஷ்வான் ஆகியோரை நிரபராதி என விடுவித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் 19பேர் விசாரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.