24 special

பாஜக தலைவரை தாக்கிய மர்மநபர்கள்..! உபியில் பதட்டம்..!

bjp leader and up police
bjp leader and up police

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநில கிசான் மோர்சாவின் மாநில தலைவராக இருப்பவர் தினேஷ் தாகூர். இவர் மொராதாபாத் சிவில் லைன்ஸ் ராம்கங்கா விஹாரில் வசித்து வருகிறார். இவர் கோட்வாலி காவல்நிலையத்தில் நேற்று ஒரு பரபரப்பு புகார் அளித்தார்.


அந்த புகாரில் " வெள்ளிக்கிழமை தாஜ்புர் மாபியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  இரவு விழாவில் சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு 12..30 மணியளவில் எனது நண்பர் விஷேசுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். கோட்வாலி அருகே உள்ள ஜமா மஸ்ஜித் பாலத்தை கடந்து மொராதாபாத் பஜார் கஞ்ச் நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.

அப்போது திடீரென ஐந்து முதல் ஆறு பைக்குகளில் சில இளைஞர்கள் காரின் முன்னாள் வேகமாக சென்று திடீரென நிறுத்தினர். அப்போது மேலும் சிலர் அங்கு வந்தனர். என்னையும் விஷேசயும் இழுத்து சேண்டப்பிரு சராமாரியாக தாக்க தொடங்கினர். காரையும் சேதப்படுத்த முயற்சித்தனர். அப்போது திடீரென காவல்துறையினர் வந்ததால் தப்பியோடிவிட்டனர்" என பிஜேபி தலைவர் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து CO மகேஷ் சந்திரா செய்தியாளர்களிடம் "மே 20-21 இடைப்பட்ட இரவில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பிஜேபி கிஷன் மோர்ச்சா தலைவர் தினேஷ் தாக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்றுவருகிறது. தினேஷுக்கு மருத்துவ பரிசோதனை நடைபோற்றுவருகிறது. 

அவர் கை கால் முகம் முதுகு என பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்" என CO குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்தினம் தான் பிஜேபி கலைவரின் தம்பி ஒருவர் தனது காருக்குள் வைத்து நெற்றிப்பொட்டில் சுடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் மக்களிடையே பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது.