24 special

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் முடிந்ததா... சிக்கலில் சீமான்..!

Seeman, Political
Seeman, Political

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிராந்திய கட்சிகள் தொடங்கி, தேசிய கட்சிகள் வரை கூட்டணிப்பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் எப்போதும் தனித்து போட்டியிட்டு மற்ற கட்சிகளுக்கு ஆட்டம் காண வைக்கும். இந்த தேர்தலுக்கும் முன்கூட்டியே தமிழத்தில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சிகளுக்கு தற்போது தாயில் இடி விழுந்தது போல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட வாரியாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்தை நடத்தி ஆதரவு தெரிவித்து திரட்டி வந்தார்.  கூட்டத்தில் மாநிலத்தை என்னிடம் கொடுத்தால் எனது ஆட்சியை மக்களுக்கு சிறப்பாக காட்டுவேன் என இளைஞர்கள் மத்தியில் பேசிய சீமான் ஒரே வார்த்தையில் இளைஞர்கள் பட்டாளத்தை தன் பக்கம் ஈர்த்து வருவார். நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்து போட்டியிடும்  தனது பெரும்பான்மையை அதிகரித்து ஒருநாள் முதலமைச்சராக வருவேன் என பேசி வந்த சீமான். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட இடத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இது சீமானுக்கு திடுக்கிடும் தகவலாக இருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா எனும் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கரும்பு சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து கேட்டு பெற்றுள்ளது. மேலும், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உட்பட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடப்போவதாகவும், இதனால் விவசாய சின்னத்தில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது அக்கட்சியின் தலைமைக்கு சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி இது தொடர்பாக முறையிட உள்ளதாக கூறப்படுகிறது. 

மீண்டும் அந்த சின்னம் பெற தீவிரமாக இருக்கும் சீமான், 2026ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் பங்குபெற்று வரும் நாம் தமிழர் கட்சி, தினைத்து போட்டியிட்டு தற்போது வரை அக்கட்சியின் வாக்குசதவீதம் கிட்டத்தட்ட7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து காட்ட சீமான் முயற்சித்து வந்த நிலையில் அது மொத்தமாக கலியாகியுள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் அக்கட்சி ஒரு முறைக்கூட சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை. இப்போது இந்த பிரச்சனை எழுந்துள்ளதால் இதற்கு சீமான் இன்னும் எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. அக்கட்சியில் உள்ள நிர்வாகி சாட்டை துரைமுருகன் மட்டும் கட்சியின் சினத்தை திரும்ப பெற போராடி வருவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி சீமான் நாட்டை என்னிடம் கொடுங்கள் என கத்தி கூச்சலிட்டு வந்தார். இப்போது அவரது கட்சியே பாதுகாத்து கொள்ளமுடியவில்லை. அவர் எப்படி நாட்டை காப்பாற்றுவார் தேர்தல் ஆணையிடம் சொல்லி மீண்டும் பழையபடி மெழுகுவர்த்தி சின்னத்தை கேட்டு வாங்குங்கள் அப்படி தேட்ர்ஹல் ஆணையம் அதை கொடுத்தாலும் மக்கள் மனதில் விவசாயி சின்னம் தான் தெரியும், மெழுகுவர்த்தி தெரியுமா தேர்தலுக்கு முன்பே மக்களிடம் கொள்கையை பரப்ப முடியுமா என கேள்விகள் முன் வைத்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.