24 special

கெத்து காட்டிய இந்து முன்னணி.... வேற லெவல் தெறி சம்பவம்...

udhayanithi  , church
udhayanithi , church

எந்த நேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழித்தே தீருவேன் என்று கூறினாரோ தெரியவில்லை ஆனால் அது அவரின் கெட்ட காலம் என்று தற்போது கூறப்படுகிறது. ஏனென்றால் சனாதன பேச்சால் INDI கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி கூட்டணியை தற்போது சில்லு சிலாக உடைந்து விட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் முக்கிய பிரபலங்களாக அறியப்படும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்து சமயத்தை நோக்கி வர ஆரம்பித்தனர். முதலில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் வி சந்திரசேகர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி சிவனின் பக்தன் என்று தன்னை பெருமிதமாக கூறிக் கொண்டார். அதோடு இன்றுவரையிலும் வாரந்தோறும் தவறாமல் சிவன் கோயிலுக்கு சென்று தியானம் செய்து வருகிறார். இவரைப் போன்று தீவிர கிறிஸ்தவராக இருந்து வந்த லிவிங்ஸ்டன் ராமர் மீது பற்று ஏற்பட்டு ராமர் கோவிலுக்கெல்லாம் சென்று ராமரின் கீதங்கள் எல்லாம் பாடுவதாகவும் கிறிஸ்தவத்தின் மீது போர் அடித்து விட்டதாகவும் ராமரை நினைத்து அமைதியாக அமர்ந்து தியானித்தால் மன அமைதி கிடைத்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 


மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் சிறு குழந்தைகளும் இந்து மதத்தின் போதனைகளையும் கீர்த்தனைகளையும் பக்தியோடு கற்றுக் கொள்ளும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது அதோடு சிறு குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று கடவுளின் கதைகளையும் அருமைகளையும் புகழையும் போதிக்கும் வீடியோக்களும் வைரலானது. அதே சமயத்தில் பல தேவாலயங்களில் பல முறைகேடுகள் மற்றும் கொலைகள் நடக்கும் சம்பவங்களும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதும் செய்திகளில் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தேவாலயங்களில் நடைபெறும் ஊழல் குறித்த கேள்விகள் மற்றும் அது குறித்து புகார் அளிக்கும் கிறிஸ்தவத்தை சார்ந்தவர்களே கொல்லப்பட்ட சம்பவமும் செய்திகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகவே இந்து சமயத்தை பின்பற்றுபவர்களும் சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் தற்போது  அதனை வளர்ப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் புரசை பகுதியில் அப்போஸ்தல கிறிஸ்தவ சபையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று துண்டு பிரச்சாரங்களை விநியோகித்து மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் இந்து கோவிலுக்கு அருகிலே வண்டியை நிறுத்தி ஜெபம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த இந்து முன்னணியை சேர்ந்த சிலர் அங்கு விரைந்து சென்று இதெல்லாம் இங்கு பண்ண கூடாது நீங்கள் கிளம்புங்கள் என்று கூறியுள்ளனர் இருப்பினும் அங்கிருந்து சிலர் நகராமல் நின்றதால் கிளம்புங்க இது எங்களுக்கு பிடிக்கல நீங்க கிளம்புங்க என்று கூறிக்கொண்டே வீடியோ எடுக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், புரிசை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட அப்போஸ்தல கிருஸ்துவ சபையை சேர்ந்த நபர்கள், வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து உடனே அங்கு சென்ற இந்து முன்னணி பொறுப்பாளர்கள், அங்குள்ள பொதுமக்களை இணைத்து, மதமாற்ற கும்பலை திருப்பியனுப்பினர். மேலும் இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்து முன்னணியின் சமூக வலைதள பக்கத்திலும் இந்த வீடியோவும் அதற்கான பதிவும் இடப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தையும் மதமாற்றும் முயற்சியிலும் ஈடுபட முடியாது என்ற விமர்சனங்கள் இதற்கு முன் வைக்கப்படுகிறது.