Tamilnadu

திருமாவளவன் "காலணியை" பாதுகாத்த சம்பவம் வெளுத்து எடுத்த நாராயணன் திருப்பதி!

Thirumavalan and narayanan
Thirumavalan and narayanan

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது காலணியை மழை நீரில் இருந்து பாதுகாக்க சேர்களை வரிசையாக அடுக்கி அதை அக்கட்சியினரை இழுத்து வர செய்து பாதுகாப்பாக காரில் ஏறி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது, இந்த வீடியோ காட்சிகள் கடும் எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.


காலணி மக்களை காப்பேன் என்று முழக்கமிட்டு கட்சி ஆரம்பித்த திருமாவளவன், தனது செருப்பினை பாதுகாக்க அதே மக்களை இழுத்துவர செய்து காரில் ஏறியது எந்த வகையில் நியாயம் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல் இல்லையா? உடனடியாக திருமாவளவன் மன்னிப்பு கேட்கவேண்டும் உள்ளிட்ட பல எதிர்ப்பு குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த சூழலில் திருமாவளவன் மற்றும் இது குறித்து மவுனம் காக்கும் ஊடகங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-

தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தன் காலணி தண்ணீரில் நனைந்து விடா  வண்ணம் பலருடைய உடலுழைப்பை உபயோகித்து சேர்களில் நடந்து வந்து திருமாவளவன் அவர்கள் காரில் ஏறி அமர்ந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணம் திருமாவளவன் என்பதை நிரூபித்துள்ளார். இனி, அரசியலில் எளிமை, தூய்மை என்ற கருத்துகளை சொல்லும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் திருமாவளவன் அவர்கள்.

அதே போல், ஒடுக்கப்பட்டவர்களுக்காக இருப்பதாக சொல்லிக்கொண்டு, தொண்டர்களின் உடலுழைப்பை உறிஞ்சிய அவரின் செயலை கண்டிக்காத அரசியல்வாதிகளும் இனி தங்களை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்து விட்டார்கள். பல ஊடகங்கள் இது குறித்து மௌனம் காப்பது அவற்றின் நடுநிலைத் தன்மையை தோலுரித்து காட்டி விட்டது.

சமூக அநீதியின் முத்திரை  மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும் என்று குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி. இதையே பாஜகவினரோ அல்லது பாமகவினரோ செய்து இருந்தால் ஊடகங்கள் இவ்வாறு அமைதி காக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.