Tamilnadu

நாற்காலி என்ன நாற்காலி அண்ணன் நினைத்தால் முரட்டு முட்டு கொடுத்த விசிக வன்னியரசு!

Vanniarasu
Vanniarasu

திருமாவளவன் மழைநீரில் இருந்து தனது காலணிகள் நனைந்துவிடாமல் இருக்க நாற்காலிகளை வரிசையாக அடுக்கி அதன் மீது ஏறி நடந்து வர அதனை சிலர் எடுத்து வரிசையாக அடுக்கி திருமாவளவன் காலணிகளை பாதுகாப்பாக பாதுகாத்து தண்ணீர் படாதவாறு பாதுகாப்பாக அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் கடும் எதிர்ப்பை திருமாவளவனுக்கு கொடுத்து வரும் சூழலில் விசிகவை சேர்ந்த வன்னியரசு அண்ணன் நினைத்தால் சொகுசு விடுதியில் தங்களாம்.. தம்பிகள் நாங்கள் உதவினோம் என திருமாவளவனின் செயல்பாட்டினை நியாய படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டது பின்வருமாறு :-

 “வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும்.ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார்.

முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்.இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வன்னியரசு கொடுத்துள்ள விளக்கம் முழுக்க முழுக்க பாசிச போக்கை கொண்டது எனவும் ஒரு தலைவன் நினைத்தால் தொண்டர்களை அடிமைகளாக நடத்தலாம் என்பது போன்ற தோற்றத்தை வன்னியரசின் விளக்கம் கொடுக்கிறது என கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர் இணைய வாசிகள்.. முட்டு கொடுக்கலாம் ஆனால் இவ்வாறு கொடுக்க கூடாது எனவும் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.