24 special

வால் ஒட்ட நறுக்கப்படும் என்ற "திருமா" அதே பாணியில் பதிலடி கொடுத்த நாராயணன் திருப்பதி..!

Narayana tirupathi ,thirumavalan
Narayana tirupathi ,thirumavalan

தமிழகத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் விளம்பரமும் இல்லாமல் நடைபெற இருந்த RSS அணிவகுப்பை இலவச விளம்பரம் கொடுத்து வழக்குகள், பேட்டிகள் மூலம் தமிழகத்தின் குக் கிராமங்கள் வரை கொண்டு சென்றுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.


திருமாவளவன் தொடர்ந்து RSS பேரணிக்கு எதிராக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம், நீதிமன்றத்தின் சீராய்வு மனு என நடவடிக்கைகளை தொடர்ந்த திருமாவளவன் இறுதியில் உயர் நீதிமன்றம் RSS ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம் மூக்கு உடைபட்டு நிற்கிறார். இந்த சூழலில் திருமாவளவன் RSS வால் தமிழகத்தில் ஒட்ட நறுக்கப்படும் என பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட நிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இது குறித்து அவர் குறிப்பிட்டதாவது.

இங்கு நடப்பது பெரியார் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு என்பதை உணராமல் இருக்கிறார்கள். ஆர் எஸ் எஸ், பிற மாநிலங்களில் செய்த சேட்டைகளை இங்கே செய்யலாம் என்று கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களின் வால் ஒட்ட  நறுக்கப்படும் - என்று கூறி இருக்கிறார் தொல்.திருமாவளவன்.

அவருக்கு இந்தியாவில் நடப்பது நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் அரசு, மன்மோகன் அரசோ, சோனியா காந்தி அரசோ அல்ல. தமிழகத்தில் அப்போதெல்லாம் செய்த சேட்டைகளை இப்போதும் செய்யலாம்  என்று கருதுகிறவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும் என நாராயணன் திருப்பதி திருமா பயன்படுத்திய அதே பாணியில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.