மிக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம் ஒன்று திரைப்படம் நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
சோழ மன்னர் சுந்தர சோழர் நோய் வாய்ப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலன் வடக்கில் தங்களது சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த போர் புரிந்து வருகிறார். மகள் குந்தவை தனது நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இளைய மகன் அருண்மொழி வர்மன் இலங்கையில் போர் புரிந்து சோழக் கொடியை அங்கு பறக்க வைக்கிறார்.
இந்நிலையில் சுந்தர சோழரிடமிருந்து ஆட்சி அதிகாரம் அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு செல்லக் கூடாது என நிதி அமைச்சர் பழுவேட்டரையர் சிற்றரசர்களுடன் சேர்ந்து ஆலோசித்து சுந்தர சோழரின் பெரியப்பா மகன் மதுராந்தகனை அரசராக நியமிக்க முடிவு செய்கிறார்கள்.
இது பற்றி அறிந்து தன் தங்கை குந்தவைக்கும், அரசருக்கும் சொல்ல வேண்டும் என தனது நண்பன் வந்தியத் தேவனை தூது அனுப்புகிறார் ஆதித்த கரிகாலன். இதனிடையே, பாண்டிய மன்னனைக் கொன்றதால் ஆதித்த கரிகாலனையும், சோழ சாம்ராஜ்ஜியத்தையும் அழிக்க பாண்டிய மன்னனின் படையினர் சபதமெடுக்கிறார்கள்.
பழுவேட்டரையரின் மனைவியும், ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியுமான நந்தினியும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரியணை மீது ஆசைப்படுகிறார். இப்படிப்பட்ட சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த முதல் பாகத்தின் சுருக்கமான கதை.
இந்த கதை தற்போது பல்வேறு விமர்சனங்களை பெற்று இருக்கிறது, மிக பெரும் எதிர்பார்ப்புடன் வந்த தங்களை பட குழு ஏமாற்றி விட்டதாக படத்தை பார்த்த ரசிகர்கள் பேசும் வீடியோ மிக பெரியார் அளவில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் என்றால் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இசை அமைப்பாளர் ரஹ்மானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
என்ன இசை இது என நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மொத்தத்தில் படத்திற்கு அளவிற்கு அதிகமாக விளம்பரம் கொடுத்த நிலையில் தற்போது திரைப்படம் எந்த அளவு வெற்றியை பெறுகிறது என்பது நாளை முழுமையாக தெரிந்துவிடும்.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது...