தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிரடி ஆட்டத்தின் மூலம் திமுக அரசு பதற்றத்தில் உள்ளதா??? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழகத்தில் பல ஊழல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது எனவும் அதை நிறுப்பிக்கும் பொருட்டு அவர்களுடைய ஊழல் பட்டியலை திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் வெளியிட்டிருந்தார். இது தமிழகத்தில் அதிக பேசுபொருளான நிலையில், திமுக அமைப்பின் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதுகுறித்து விளக்கம் அளிக்கம்படி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அவருடைய அறிக்கையில், திமுகவினரின் சொத்து பட்டியலில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டதற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும். மேலும், இதுதொடர்பாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாரதி, நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் திமுக அரசு இதுவரை எந்தவொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்ததிற்கும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது”.
பொய்யான ஒரு தகவலை அறிக்கையின் மூலம் வெளியிட்ட திமுக அமைப்பின் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதில் “சொன்னது நீ தானா??? சொல்.. சொல்.. சொல்.., தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட திமுகவின் சொத்து பட்டிலுக்கு மறுப்பு தெரிவித்து, திமுக அவதூறு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில் நோபல் ஸ்டீல்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு எந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என திமுக அறிவாலயம் குறிப்பிட்டுள்ளது எனக்கு வியப்பளிக்கிறது. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தான் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் சுமார் 1000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திமுக அரசு மேற்கொண்டது”.
“அதற்கான ஆதாரம் புகைப்படத்தில் இருக்கிறது. நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இன்று அதை மறுக்கிறதா திமுக? அல்லது பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் புதிய ஆட்டத்திற்கு பயந்து, பதற்றமடைந்து, அஞ்சி, திணறி, சிக்கி திணறுகிறதா திமுக?? என நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். மேலும் திமுகவின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலின் பார்ட் தொடரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்”.