24 special

நரிக்குறவர் நலவாரியம் வெளியிட்ட அறிக்கை..! பதறிப்போன சீமான்..!

Seeman
Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், சமீப காலமாகவே தமிழகத்தில் சாதி தொடர்பான பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அந்த பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழகத்தில் இருக்கும் அருந்ததியர் சமூகத்தினர் எல்லாம் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த வந்தேரிகள் என பேசினார். அருந்ததியர் சமூகத்தை பற்றி அவதூறான கருத்துக்களை பொது மக்களிடம் கூறிய சீமானுக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து, அப்பகுதியை விட்டு வெளியேறும் படி கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும் இடைத்தேர்தல் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்தும் சீமான் அருந்ததியர் பற்றி அவதூறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதற்கு இன்று அளவும் தமிழகத்தில் பொதுமக்களும், அருந்ததியர் சமூதாய  மக்களும் அவர்களுடைய எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகின்றனர்.

“இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது செய்யப்பட வேண்டும் என நரிக்குறவர் நலவாரியம் உறுப்பினர்கள் சங்கம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தொடர்ந்து நரிக்குறவர் இன மக்களை அசிங்கப்படுத்தியும், அவதூறாகவும் பேசிவருகிறார். 

மேலும், தமிழகத்தில் இருக்கும் நாங்கள் நரிக்குறவர் கிடையாது என்றும் பிற மாநிலத்தில் இருந்து வந்த வந்தேரிகள் தான் நரிக்குறவர்கள் என்றும் தொடர்ந்து பேசுகிறார். அதன் பிறகு எங்கள் சமூதாயத்தினரிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்.

தமிழக அரசின் மூலம் தேனி மாவட்டத்தில் எங்களுக்கென வழங்கப்பட்ட இடத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களிடையே பல பிரச்சனைகளை சீமான் ஏற்படுத்து முயற்சிக்கிறார்.

இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீதும் அவரை போன்று எங்கள் சமூதாயத்தில் பிரச்சனைகளை தூண்டி வரும் வனவேங்கை கட்சியின் இரணியன் என்பவரையும் கண்டித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நரிக்குறவர் மக்களை ஒரே அணியாக திரட்டி தேனி மாவட்டத்தில் வரும் 30 ஆம் தேதி போராட்டம் நடத்து போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து அந்தந்த பகுதியில் இருக்கும் காவல் துறை ஆணையரிடம், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கோரிக்கை வைக்க போவதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்”. 

இந்நிலையில்  ‘நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் சீமானை கைது செய்யும் படி போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, இனி எதிர் வரும் தேர்தலில் அவர்களிடம் ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலைக்கு சீமான் தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டத்தின் மூலம் சீமான் விரைவில் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன’.