24 special

பிரதமர் மோடி போட்ட புகைப்படம்....! பின்னால் ஒளிந்திருக்கும் பல உண்மைகள்...!

pm modi
pm modi

பிரதமர் மோடி ஒரு செயலை செய்கிறார் என்றால் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவர் அந்த வகையில் சமீபத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் சிறந்த சுற்றுலா தளமான லட்சதீவில் இருந்து போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் பிரதமர். இந்த புகைப்படம் சமீபத்தில் பெரும் வைரலானது, என்னடா இது பிரதமர் மோடி எதையும் இந்திய நலன் இன்றி செய்ய மாட்டாரே இந்த புகைப்படம் சொல்லும் செய்தி என்ன என பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில் தற்போது மாலதீவு கதறியதில் இருந்து பெரும் சம்பவம் வெளிவந்து இருக்கிறது.மாலதீவிற்கு இந்தியா பல உதவிகளை செய்து இருக்கிறது குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் மாலத்தீவு மீது இருக்க கூடாது என்ற காரணத்தின் அடிப்படையில் இலங்கைக்கு உதவிகளை அளித்தது போன்று மாலதீவிற்கும் இந்தியா உதவிகளை செய்து வந்தது, பெரும்பாலான இந்தியர்கள் மாலதீவிற்கு சுற்றுலா செல்ல இரு நாடுகளும் பல்வேறு சலுகைகளை அளித்தன அதன் அடிப்படையில் இந்தியர்கள் வருகை அதிகரித்த காரணமாக மாலதீவிற்கு சுற்றுலா மூலம் அதிக வருமானம் வந்தது.


இந்த நிலையில் தான் மாலதீவில் புதிய அதிபராக முகமது முஸு வெற்றி பெற்றார், இதற்கு முன்னர் 2008-ல் இருந்து 2023 வரை வெற்றி பெற்ற அனைத்து அதிபர்களும் இந்தியாவை தங்கள் முதன்மை தேர்வாக கொண்டு இருந்தனர் ஆனால் முகமது முஸு சீனாவை தனது நட்பு நாடக அறிவித்தது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.இந்தியா மூலமும் இந்தியர்கள் மூலமும் தான் மாலதீவிற்கு வருமானம் என்பதை மறந்து செயல்பட தொடங்கிய மாலதீவு அதிபருக்கு இந்தியாவின் லட்சதீவில் இருந்து ஒரு போட்டோ மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறார் மோடி.லட்ச தீவில் இல்லாத என்ன இயற்கை சூழல் மாலதீவில் இருக்கிறது என்ற கேள்வி தற்போது எழுந்து இருக்கிறது.  மாலதீவு சுற்றுலா மூலம் வருமானம் பெற்ற சுற்றுலா வாசிகள் தற்போது கதறி வருகின்றனர் இந்தியாவை புதிய அதிபர் பகைத்த காரணமாக இனி மோடி லட்ச தீவை பெரிய அளவில் சுற்றுலா தளமாக மாற்ற போகிறார், இனி மாலதீவிற்கு வரும் வருமானம் லட்ச தீவிற்கு செல்லும் இப்போது சந்தோசமா என மாலாதீவின் புதிய அதிபரை நோக்கி அந்த நாட்டு மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.மோடி ஒரு செயலை செய்தால் ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதில் இந்தியாவின் நலனும் இருக்கும் என்பது தற்போது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.