24 special

கை வரிசையை காட்டிய திருடர்கள் ....! காவல்துறை கொடுத்த சிறப்பு தண்டனை... !

rain issue
rain issue

மக்கள் வெள்ளத்தில் உயிரை காப்பாற்ற தங்கள் வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறிய நிலையில் இதை பயன்படுத்தி உள்ளே நுழைந்து நகைகளை திருடிய திருடனை திரைப்பட பாணியில் போலீஸ் பிடித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்கிற அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 17 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கன மழை காரணமாக முடிச்சுரே மழை நீரால் முழுகி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு உயிர் தப்பினால் போதும் என அவர்களது உறவினர் வீட்டுக்கும் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கும் சென்று விட்டனர்,மழைநீர் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் குடியிருப்பு வாசிகள் வீட்டுக்கு வந்து பார்த்த போது அடுத்தடுத்து ஆறு விடும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த நகை பணம் எல்லாம் மாயமானதை கண்டதும் பதரி போன அனைவரும் இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில்.சரத்குமார் என்பவர் வீட்டில் 17,சவரன் தங்க நகைக்கள் இரண்டு லட்சம் பணம்,மேலும் கண்ணண் என்பவர் வீட்டில் 15,சவரன் தங்க நகைகளும்,விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7,சவரன் தங்க நகைகளும் மற்றும் 1 லட்சம் பணமும்,கார்திக் என்பவர் வீட்டில் 7 சவரன் தங்க நகைகளும்அருண் என்பவர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் என 60 சவரம் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது.இவர்களெல்லாம் சிறுக சிறுக சேர்த்து வைத்த வாங்கிய நகைகள் எல்லாம் காணாமல் போனதை கண்டு கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,

முடிச்சூர் பகுதிமுழுவதும் மழைநீர் சூழ்ந்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் எதுவும் செயல்பட வில்லை இதனால் குற்றவாளியை கண்டு பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருந்தது, ஏற்கனவே அதே பகுதியில் மூன்று மாதத்திற்கு முன்பு 50 சவரன் தங்க நகைகள் காணாமல் போன நிலையில் இதுவரையில் சிசிடிவி கேமரா ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை ஆதாரங்கள் இருந்தபோதே போலீசாரால் குற்றவாளியை கண்டுபிடிக்காத போது எந்த ஒரு தடையும் இன்றி குற்றவாளி சீக்குவாரா என்று கேள்விக்குறியாக தான் இருந்தது.மழை வெள்ளத்தால் பல இன்னல்களை சந்தித்த வந்த பொதுமக்கள் முடிச்சூர் பகுதியில் அடுத்தடுத்து ஆறு வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் சேகரிக்கப்பட்ட கைரேகை பதிவுகள் மற்றும் குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் கைரேகைகள் ஒப்பீடு செய்யப்பட்டது அதன் பேரில் சோமங்கலம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சூர்யா (எ) கிளி யின் கைரேகை ஒத்து போனதை தொடர்ந்து சென்னையில் முகாமிட்ட தனிப்படை போலீசார் சென்னை புறநகர் பகுதியில் தங்கி இருந்த சூர்யாவை கையும் களவுமாக பிடித்து சோமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்போலீசார் விசாரணையில் 5 வீடுகளில் கொள்ளையடித்தது தான் தான் என ஒப்புக் கொண்ட சூர்யா திருடிய நகைககளில் 15 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்அதனைத் தொடர்ந்து சூர்யா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.