திரை உலகின் 69 ஆவது தேசிய விருதுகள் குறித்த தகவல்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது அதில் தெலுங்கு இயக்குனர்கள் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா தி ரைஸ் மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய இரண்டு படங்கள் அதிக விருதுகளை குவித்துள்ளது.
புஷ்பா தி ரைஸ் படத்தில் சிறந்த நடிகராக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சிறந்த நடிகைக்கான விருது ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆர் ஆர் ஆர் படம் ஆறு தேசிய விருதுகளை குவித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுக்கான நரகீஸ் தத் விருது காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது இதே காஷ்மீர் பைல்ஸ் படத்தில் நடித்த பல்லவி ஜோஷிக்கு கிடைத்துள்ளது.
மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ராக்கேட்ரி நம்பி எஃபெக்ட் படத்திற்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் கடைசி விவசாயி படத்திற்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றுள்ள மாயவா துயவா என்ற பாடலின் பாடகையான ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிகான விருதும் தமிழ் திரை உலகின் சிறந்த படமாக கடைசி விவசாயி படத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தேசிய விருது பட்டியலில் தமிழ் சினிமாவில் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை குவித்ததோடு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்றும் படம் மட்டும் ஐந்து தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் மற்றும் சார்பட்டா பரம்பரை போன்றவற்றிற்கு தேசிய விருதுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் பெரிதாக எந்த ஒரு விருதுகளும் வழங்கப்படாதது நடிகர் சூர்யா உள்ளிட்ட இடதுசாரி குழுவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதோடு நடிகர் சூர்யாவிற்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படாததால் சில எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது அதிலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினே ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்கப்படவில்லை என்பதை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏன் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறித்த கேள்விகளை பட குழுவினர் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை கேள்வி எழுப்பி வருவதும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஜெய் பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது வழங்கப்படவில்லை என்று பி சி ஸ்ரீராம் கேள்வி எழுப்பியதோடு, 69ஆவது தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது நினைத்து திரை துறையை சேர்ந்தவராக எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்கப்படவில்லை இதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா அல்லது இந்தியாவின் குரலை கேட்டு அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக விசாரித்த பொழுது ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை வில்லத்தனமாக சித்தரித்தது மற்றும் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இருந்தது தேர்வர் குழுவின் காதுகளுக்கு சென்றதாகவும் இந்த படத்திற்கு தற்போது விருது கொடுத்தால் மேலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதற்காக ஜெய் பீம் படத்திற்கு விருதுகள் வழங்கப்படவில்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இடதுசாரிகள் கதறி வருகின்றனர்.