24 special

திமுக அமைச்சர்களை வம்பில் மாட்டி விட்ட ஆர் எஸ் பாரதி....!

Rsbharathi , mkstalin
Rsbharathi , mkstalin

கடந்த சில நாட்களாகவே திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அரசுத்துறை வசம் புகார் காரணமாக சிக்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுகவில் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வழக்கு பல நாட்களாக நீண்டு வரும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு ஒரு துளி கூட வாய்ப்பில்லை என்ற பேச்சுக்களும் தற்போது எழுந்துள்ளன. 


இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமானத்துறை குற்றப்பிரிவு போலீஸ் ஆகியோரிடம் சிக்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது இதற்கெல்லாம் முக்கிய காரணம் அமைச்சர்களுக்கு பதவி கிடைத்தவுடன் அதனை தவறாக பயன்படுத்திக் கொண்டு அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததே என்ற பேச்சும் ஒரு பக்கம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தற்போது சிக்கி உள்ளனர். அதாவது இவர்கள் மூவரும் கடந்த ஆட்சியில் வருமானத்தை மீறி சொத்து சேர்த்தாக வழக்கில் பதிவு செய்திருந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும் வரவிற்கு ஏற்ற கணக்கு பட்டியலை ஒப்படைக்கப்பட்டதாலும் இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது ஆனால் இந்த வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் உண்மைகள் பல ஒளிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இவர்களது வழக்கில் முதன்மை நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதற்காக திட்டமிட்டுள்ளார் இவ்வாறு நீதித்துறையே தானாக முன்வந்து வழக்கை மறுவிசாரணை செய்வது அனைவர் மத்தியிலும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் அவர்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவும் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இப்படி திமுகவில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் வரிசையாக சிக்கிக் கொண்டு வரும் நிலையில் எப்போது பிரச்சனை ஏற்பட்டாலும் முதலாக வந்து நிற்கும் ஆர் எஸ் பாரதி இந்த பிரச்சனையிலும் கூட மூக்கை விட்டு மேலும் பிரச்சனையை இழுத்து வைத்துள்ளார் அதாவது கடந்த ஒரு வார காலமாகவே நீதிமன்றங்கள் பழைய வழக்குகளை தோண்டி விசாரணை நடத்தி வருவதாகவும் நீதிமன்றங்கள் மீது திமுக மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது என்றும் மேலும் நாங்கள் இதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியது தற்போது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது இப்படிதான் செந்தில்பாலாஜி வழக்கிலும் இவர் தேவையில்லாமல் நுழைந்ததால் தற்போது செந்தில் பாலாஜி நிலைமை மோசமாகியுள்ளது அதேபோல் இந்த அமைச்சர்களின் நிலைமையும் மோசமாக ஆர் எஸ் பாரதி செயல்பட்டு வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஏற்கனவே இப்படி தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்படும்போது ஆர் எஸ் பாரதி செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்றதும் இது சட்டத்திற்கு புறம்பானது செந்தில் பாலாஜி கைது செய்யப்படக் கூடாது என்று பொங்கியதும் அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி தற்சமயம் வரை சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர் எஸ் பாரதி இந்த மூன்று அமைச்சர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் மேலும் பிரச்சனையை வளர்த்து விட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.