2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் எந்த கட்சியினருடன் கூட்டணி சேர்வது மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பது தொகுதி பங்கீடுகளை பிரிப்பது போன்ற பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக உழைத்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்து பாட்னா மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு இடங்களிலும் ஆலோசனைக் கூட்டங்களை முடித்துள்ளனர்.
அடுத்தபடியாக மூன்றாவது கூட்டம் பூனேவில் இந்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளே பல போட்டிகள் நிலை வரும் நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியா? காங்கிரஸ் கட்சியா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் கூட்டணி கட்சிக்குள்ளே பிளவு ஏற்பட்டுள்ளது
இப்படி இந்தியா என்ற கூட்டணி ஆரம்பித்து இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடத்திய நிலையில் மூன்றாவது கூட்டத்திலேயே எதிர்க்கட்சி கூட்டணிக்கு உள்ளே பிளவு ஏற்பட்டது கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது மேலும் இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நடவடிக்கைகள் அவ்வப்போது பாஜகவிற்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றமும் எதிர்க்கட்சி கூட்டணியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு கட்சியாக உடைந்த நிலையில் அஜித் பவார் மற்றும் சரத் பவார் ஆகிய இருவரும் கட்சியை நடத்தி வருகின்றனர் மேலும் சில தினங்களுக்கு முன்பு சரத் பவார் அஜித் பவரை சந்தித்து பேசியதும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் சரத் பவாரி மகள் சுப்ரியா சூலேமும் பாஜகவின் பக்கம் சாயவிருக்கிறார் என்ற தகவலும் இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்ட இழப்பு என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலேபாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்றும் பாஜகவில் எம்பி பதவிக்காக ஆசைப்பட்டு பாஜகவில் உள்ள தலைவர்களிடம் பேசி வருவதாகவும் பேச்சு எழுந்தது மேலும் இதை கிளப்பிவிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் சுப்ரியா சூலே அதற்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில பேர் இப்படி தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்று அவர் விளக்கம் அளித்தார்.
ஏற்கனவே எதிர்க்கட்சி கூட்டணியில் பல சர்ச்சைகள் நடந்து வரும் நிலையில் சரத் பவார் வேறு கூறிய செய்தி கூட்டணி கட்சிக்கு பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதாவது தேசியவாத காங்கிரஸ் கட்சி உடையவில்லை என்றும் கட்சியில் சில பேர் மட்டும் பாஜகவை ஆதரித்து வருகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியது தற்போது பேசு பொருளாகியுள்ளது இந்நிலையில் அஜித் பவர் கட்சியிலிருந்து வெளியேறவில்லை என்ற தகவலை சரத் பவார் கூறியதும் அவ்வப்போது இவர்கள் இருவரும் கூடி பேசி வருவதால் அஜித் பவர் சரத் பவாரை இந்தியா கூட்டணியில் இருந்து மெல்ல பாஜக பக்கம் இழுத்துவிடுவாரோ பயத்தில் தற்போது இந்தியா கூட்டணி இருந்து வருகிறது .
இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் எதிர்க்கட்சி இந்தியா கூட்டணி நீடித்து நிலைக்குமா என்ற பேச்சும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் கூட்டத்திலும் கூட பாரத பிரதமர் நரேந்திர மோடி சரத் பாவாரை ஆதரித்து பேசியதும் இருவரும் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டதும் சரத் பவார் அவ்வப்போது பாஜகவிற்கு ஆதரவாக பேசி வருவதும் இந்திய கூட்டணியில் இருந்து அடுத்த விக்கெட் விழ தயாராகப்போகிறது என்பதை தெளிவாக உணர்த்தியதால் எதிர்க்கட்சி கூட்டணி இப்பொழுதே புலம்ப துவங்கிவிட்டதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன...