![mkstalin, annamalai](https://www.tnnews24air.com/storage/gallery/C8KzDZTaErBQNrIfkRfSnV0nPIzDAlh85iqvEGWS.jpg)
தமிழகம் முழுவதும் தற்போது லோக்சபா தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது அதில் குறிப்பாக தமிழகத்தின் பெருவாரியான தொகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் யாருக்கு ஆதரவாக செயல்பட போகிறது கொங்கு மண்டலத்தின் வாக்குகளை யார் பெறுவாளியாக அல்ல போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக தமிழகத்தின் கொங்கு மண்டலம் எனப்படும் கோவை கரூர் போன்ற பகுதிகளில் அதிமுகவிற்கு அதிக செல்வாக்குகளை கொண்டிருந்தது. இருப்பினும் 1998 மற்றும் 1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குப் பிறகு கோவையில் பாஜக வெற்றி பெறவில்லை எனினும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணியில் பாஜக கோவை தெற்கு தொகுதியை கைப்பற்றியது.
ஆனால் இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி நடைபெறாது என்பதால் தேர்தலில் பாஜக எத்தனை வாக்குகளை அல்லும் வாக்கு வங்கிகளின் சதவீதம் என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகளும் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது இதற்கு பதிலளிக்கும் விதமாக தனியார் பத்திரிகை நிறுவனங்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இருந்தது கடந்த தேர்தலை விட வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு நிச்சயமாக உயரும் என்பது கருத்துக்கணிப்பின் முடிவுகளாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோயம்புத்தூரை மட்டும் மையமாகக் கொண்டு கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஏழை, நடுத்தரம், பணக்காரர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் என பல பிரிவுகளின் கீழ் பல ஜாதியினரிடம் நியூஸ் கிளவுட் என்ற தனியார் நிறுவனம் கோவை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கூட்டணிகளை பின்னுக்கு தள்ளி 663 ஓட்டுகளை பெற்று பாஜக முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் 593 வாக்குகள் பெற்று திமுகவும், மூன்றாம் இடத்தில் அதிமுகவும் கருத்துக்கணிப்பின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பின் முடிவுகளும் பாஜகவிற்கு சாதகமாக அமைய தற்பொழுது கொங்கு பகுதியை மட்டும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலும் பாஜகவிற்கு சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளது பாஜகவினரிடைய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலைகள் அமைவதற்கு தமிழக மாநில தலைவர் அண்ணாமலையின் போராட்ட குணம், நேர்மை பண்பு அவரின் தலைமையில் பாஜக செயல்படும் விதம் என அனைத்தும் ஒரு காரணமாக கூறப்பட்டாலும் திமுக சார்பாக கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகளின் ஊழல் ரௌடிசம், அடாவடித்தனம் மற்றும் கண்ட பஞ்சாயத்து வசூல் வேட்டை ஆகியவற்றால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமாக உள்ளவர்களை விடுதலை செய்வோம் என்று அதிமுக திமுக கூறி சிறுபான்மையினரின் ஓட்டுகளை மட்டும் கவர்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கோவை பகுதி மக்கள் அதிமுக திமுக மீது உள்ள அதிருப்திகளை முன்வைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து சொத்து வரி, பத்திரப்பதிவு வரி, மாநகராட்சி வரி என அனைத்து வரிகளும் உயர்ந்து மானியங்கள் குறைந்து இருப்பதும் தொடர்ச்சியாக அண்ணாமலையும் திமுகவின் ஊழல் பட்டியல்களை பல பாகங்களாக ஆடியோக்களாக வெளியிட்டு வருவதும் பொது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு திமுக மீது உள்ள கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அதே நேரத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மக்களோடு மக்களாக என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை மேற்கொண்டதும் கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தனை காரணங்களாலே கோவையில் தற்போது பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக்கணிப்பு வெளியானவுடன் அண்ணாமலை கமலயத்தில் திடீர் நிர்வாகிகள் சந்திப்பு ஒன்று நடத்தியதாகவும் உடனே நாம் சென்னையில் திமுக கோட்டையை துடைக்கவேண்டும் என வேறு ஆலோசனை நடத்தியதாகவும் வேறு தகவல்கள் கசிகின்றன.