![ayothi, kannan kovil](https://www.tnnews24air.com/storage/gallery/6CtoJuPow97Y7fMHMw4UuAM51Pirpy6y2Da4fwai.jpg)
தமிழகம் அதிக கோவில்களை நிறைந்த மாநிலம், இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுமே ஒவ்வொரு விதமான விசேஷங்களை கொண்டது ஒவ்வொரு திருத்தலம் அமைவதற்கும் பல புராண கதைகள் உள்ளது அந்த புராணக் கதைகளை பல மன்னர்கள் கொண்டாடி அதை மக்களுக்கு பழக்கப்படுத்தி சிறப்பான திருவிழாக்களையும் நடத்துவதற்கான வழக்கத்தையும் நடைமுறைகளையும் கொண்டு வந்துள்ளனர் அவை அனைத்தும் மன்னர்களின் வழிபாடு மற்றும் பழக்கமாக மட்டுமல்லாமல் மக்களின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது ஒரு ஊரில் உள்ள ஒரு காவல் தெய்வத்திற்கு வருடத்தில் ஒரு முறையாவது திருவிழா நடத்த வேண்டும் என்பது சுற்றியுள்ள மக்களின் மிகப்பெரிய நம்பிக்கை இல்லை என்றால் அந்த பகுதியில் தேவையில்லாத மரணங்களும் துர்காரியங்களும் நடைபெறுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுவர்.
இதற்காகவே வருடாந்தோறும் திருவிழாக்களை ஒவ்வொரு பகுதியில் உள்ள கோவில்களிலும் நடத்தி வருவார் இந்த திருவிழாக்கள் கோவில் ரீதியாக மட்டுமின்றி உறவுகள் மத்தியிலும் அதிக வலுவை ஏற்படுத்துவதற்காக ஒரு காரணமாக அமைகிறது ஏனென்றால் திருவிழா என்றால் தன் சொந்தக்காரர்களையும் வேறு மாநிலங்கள் மற்றும் வேறு ஊரில் உள்ளவர்களையும் அழைத்து ஒன்றாக சேர்ந்து திருவிழாவை கொண்டாடுவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போன்ற செயல்களும் குடும்பத்தினர் மத்தியில் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொடுக்கும். இது மட்டும் இன்றி சில கோவில்கள் கட்டப்பட்டு திறக்கப்படுவதும் ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படும் அதற்கு எடுத்துக்காட்டாக அயோத்தி ராமர் கோவிலை கூட கூறலாம் ஏனென்றால் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த ஒரு விவகாரத்தில் ராமருக்கான இடமாக அந்த சர்ச்சைக்குரிய இடம் ஒதுக்கப்பட்டதும் அங்கு ராமருக்கு மிக பிரம்மாண்டமான ஒரு கோவில் கட்டப்பட்டு இருப்பதும் நிச்சயமான வரலாற்று நிகழ்வாகும்.
இதற்காக பல உயிர்கள் மற்றும் பல போராட்டங்கள் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது இந்த போராட்டங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பிறகும் அங்கு மற்ற எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் கோவில் கட்டப்பட்டு தற்போது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கோவிலுக்கு சென்று பால ராமரை தரிசித்த பொழுது என்றும் கிடைக்காத ஒரு புத்துணர்வும் மன அமைதியும் கிடைப்பதாக மக்கள் தெரிவித்தனர். மக்கள் மட்டுமின்றி சில பிரபலங்களும் இதை தெரிவித்தது நாடு முழுவதும் கவனம் பெற்றது அதுமட்டுமின்றி இந்த பாலராமனின் சிலையை வடித்தவர் கூட நான் வடித்த பொழுது இருந்த ராமர் வேறு இப்பொழுது இருக்கும் குழந்தை ராமன் வேறு முகம் முழுவதுமாக மாறி இருக்கிறது என்று கூறியிருப்பதும் ராமர் முகத்தை பார்க்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி கலந்த உணர்வு நம் மனதிற்குள் தோன்றுகிறதாகவும் அந்த சிலை செதுக்குபவர் கூறியது இணையங்களில் வைரலானது.
இந்த நிலையில் இதே போன்று ஒரு மற்றுமொரு சிலிர்க்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக உள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டம் நடுவப்பட்டி சத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணன் கோவிலின் கண்ணன் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. கண்ணனின் கண்களை திறப்பதற்கு முன்பாக சிலைக்கு முன் நின்ற பூசாரி கையில் கண்ணாடியை பிடித்திருந்தார் கண்கள் திறக்கப்படுவதை மட்டும் பாருங்கள் என்று கூறிக் கொண்டே கண்ணனின் கண்களை திறக்கும் பொழுது சட்டென்று அந்த கண்ணாடி சிதறி உடைந்தது. இந்த காட்சிகளை அந்த வீடியோவில் அப்படியே காண முடிகிறது! சுற்றி இருந்த அனைவருக்குமே பெரும் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது அந்த நிகழ்வு! ஏனென்றால் கண்ணன் சிலை எப்பொழுது திறக்கப்பட்டதோ அடுத்த நொடிய அந்த கண்ணாடி உடைந்ததை பார்த்த அனைவருமே இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் கமண்டுகளும் மிகவும் ஆச்சரியமடையும் வகையில் பதிவிடபட்டு வருகிறது.