சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் திமுக தலைமையை கடும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் குறிப்பாக திமுகவின் கோட்டை என அறியப்படும் சென்னை இந்த முறை திமுகவிற்கு கை கொடுக்க வாய்ப்பு இல்லை என திமுகவினர் பெரிய அளவில் முதல்வர் ஸ்டாலினே கவலையில் இருக்கிறாராம்.
இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் முக்கிய அதிகாரி ஒருவர் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் முக்கியமாக மூன்று விஷயத்தை கூறி இருக்கிறார் அதில் முதலில் மேயர் ப்ரியா செயல்பாடுகள் குறித்து பேசி இருக்கிறாராம்.
மேயர் பிரியா புயல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை அவரின் செயல்பாடுகளை முழுமையாக கொடுத்து இருக்கிறார் அது பாராட்ட தக்கது, அதே நேரத்தில் அவர் ஊடகங்களில் பேட்டி கொடுப்பது மிகவும் பெரிய பின்னடவை கொடுக்கிறது, மழை பாதிப்புகளை சரி செய்வோம் என கூறுவதற்கு பதில், சரி செய்துவிட்டோம் என கூறுவது பாதிக்கப்பட்ட மக்களை கொந்தளிக்க செய்கிறது.
அரசியல் அனுபவம் குறைவாக இருப்பதால் மேயர் பிரியா சமூக ஊடகங்களின் மூலம் மட்டுமே தனது கருத்தை தெரிவிக்கலாம் எனவும் ஊடகங்களை சந்திப்பது இன்றல்ல தேர்தல் வரும் நாட்களில் மிக பெரிய பின் விளைவுகளை கொடுக்கும் எனவும் கூறி இருக்கிறார். அதே நேரத்தில் மூத்த அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினிடம் சென்னைக்கு அனுபவம் உள்ள மேயர் ஒருவரை தேர்ந்து எடுத்து இருந்திருக்க வேண்டும் மேயர் ப்ரியாவிற்கு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றன இதுவே தற்போது தலைவலியாக மாறி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.
இதையடுத்து மேயர் பிரியாவிற்கு பொறுப்பு அமைச்சர் ஒருவர் மூலம் சில நாட்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும் ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்கவும் உத்தரவு சென்று இருக்கிறது.
குறிப்பாக ஊடகங்களில் பேட்டி கொடுப்பதை முழுமையாக தவிர்க்கவும் கூறப்படும் தகவல்களை அறிக்கையாக கொடுக்கவும் உத்தரவு சென்று இருக்கிறதாம். சிலர் சென்னைக்கு அனுபவம் உள்ள ஒருவரை மேயராக நியமிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்களாம்.