தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொரு கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக திமுக தரப்பில் பல கூட்டங்களும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் இளைஞர் அணியில் புதிதாக இணைக்கப்பட்ட இளைஞர்களுக்கு வரவேற்பு விழாவும் ஏற்பாடு செய்து தன் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை மறைத்து வந்தது. ஏனென்றால் திமுகவிற்குள் இருக்கும் நிர்வாகிகள் இடையே பல சச்சரவுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கூட கவுன்சிலர் மற்றும் மேயர் இடையே இருந்த பனிப்போர் பூகம்பரமாக வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது மட்டுமின்றி ஆங்காங்கே திமுக கட்சி நிர்வாகிகள் தன் கட்சிக்குள்ளே சண்டையிட்டும் போட்டி போட்டும் கொள்கின்றனர்.
ஆனால் எந்த ஒரு போட்டியும் சண்டையும் இன்றி கட்சியையும் தன் கட்சி நிர்வாகிகளையும் சேர்த்து வளர்த்துக் கொண்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் திறம்பட கையாண்டு வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி அடைந்தது பாஜகவுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இப்படி ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கும் சமயத்தில் சென்னையில் பெய்த கன மழை திமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இப்படி ஒரு கட்சி தொடர்ந்து பின்னாடைவையும் சரிவையும் சந்தித்து கொண்டு இருந்தால் அவை அனைத்தையும் மாற்றுவதற்கு ஏதாவது ஒரு ஓட்டை இருக்காதா? என்பதை தேடி பார்க்கும் அதே சமயத்தில் ஒரு வலுவடைந்துள்ள கட்சி மேலும் வலுவடைய தேர்தலுக்கு முன்பாக ஏதேனும் மக்களைக் கவரும் ஒரு தகவலை தெரிவித்தால் தன் கட்சிக்கு பலமாக இருக்கும் என திட்டங்கள் போடுவது வழக்கம்.
ஆனால் தேர்தலில் ஜெயிப்பது மக்கள் நமக்கு தரும் பரிசு மக்கள்தான் நம்மை தேர்ந்தெடுப்பார்கள் அதற்காக நாம் எந்த ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது பலரது கவனத்தை பெற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு பட்ஜெட்டை அறிவிக்கும் அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அந்த இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகள் நிறைந்த அறிவிப்புகளை இடம்பெற வைக்கலாம் அது நமது வாக்குகளுக்கு உதவி புரியும் என சில அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் கூறியுள்ளனர்.
அதற்கு நிர்மலா சீதாராமன் உடனடியாக மறுப்பு தெரிவித்து இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமான கவர்ச்சிகர அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாது. நம் தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் கூடுதலாக நாம் செய்யும் ஒரு சலுகை கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பொருளாதாரத்தில் உலகின் ஐந்தாவது நாடாக வளர்ந்துள்ளது, அதற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்பட்டு விடும்! தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மக்கள் கொடுக்கும் வரம் அதனால் எந்த ஒரு சலுகையும் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்து பிரதமரின் உழைப்பை வீணடிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு இப்படி ஒரு நிதி அமைச்சரா என அதிகாரிகள் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன