சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் நடந்து கொண்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்து வரும் வேலையில் அதற்கு புதிய தமிழகம் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தனியார் ஊடகம் ஒன்றில் திராவிட மாடல் குறித்து பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி திமுக ஆட்சியின் பல்வேறு சம்பவங்களை விமர்சனம் செய்தார் தொடர்ந்து மான்சோலை கலவரம் முதல் பேசினார் இதனால் கொந்தளித்த திமுகவினர் சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் பொது நிகழ்ச்சி என்ற அரத்தை மீறி நடந்துகொண்டனர்.
இந்த சூழலில் தற்போது திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் பல இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகிறது மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் புதிய தமிழகம் நிர்வாகிகள் கொந்தளிப்புடன் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் தேனி, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது, புதிய தமிழகம் நிர்வாகி ஒருவர் பேட்டி கொடுத்துள்ளதை அக்ககட்சியின் அதிகாரபூர்வ யூடுப் சேனல் ஒளிபரப்பு செய்துள்ளது அதில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் கடும் புகைச்சலை உண்டாக்கியுள்ளது. அதன் link கீழே இணைக்கப்பட்டுள்ளது