Cinema

வடிவேலு உண்மைகளை உடைத்த சிங்கமுத்து...

VADIVELU, SINGAMUTHU
VADIVELU, SINGAMUTHU

விஜயகாந்த் மற்றும் ராஜ்கிரண் ஆகிய இருவரும் முதலில் வடிவேலினை திரைப்படத்தில் அறிமுகம் செய்தனர். முதலில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு இன்று பெரிய காமெடியனாக வலம் வந்து கொண்டு உள்ளார் வடிவேலு. ஆனால் சினிமா துறைக்கு வந்து கொஞ்சம் புகழ் வந்த உடனேயே வடிவேலு இவர்கள் இரண்டு பேரையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டார். எங்கள் அண்ணா திரைப்படத்தின் போது பார்த்தால் தெரிந்து இருக்கும் விஜயகாந்த் அவர்கள் வடிவேலுடன் எப்படி இணைந்து நடித்திருப்பார் என்பது.  ஆனால் அதன் பிறகு விஜயகாந்த் உடன் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து அவரின் நட்பில் இருந்து பிரிந்து விட்டார்.


                                                                                                   

அதேபோலத்தான் ராஜ்கிரனை பார்த்தாலும் கூட பேசுவது கிடையாது. அது மட்டும் அல்லாமல் வடிவேலு  பொது இடங்களுக்கு சென்றால் முதலில் நன்றாக சிரித்து எல்லோரிடமும் இணைந்து பேசிக் கொண்டு இருப்பார். ஆனால் அவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே  தேவையில்லாத ஏதேனும் வார்த்தைகளை பேசி அதனை மாற்றி விடுவார். இதுபோல பலமுறை நடந்துள்ளதை நாம் பார்த்திருப்போம். மேலும் அதுபோலவே நடிகர் அஜித்குமார் உடன்  சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் வெற்றிகளை கண்டு வந்தார். ஆனால் திடீரென்று அவருக்கு என்ன ஆனது தெரியவில்லை அஜித்திடமும் இதுபோல நடந்துள்ளார். எனவே நடிகர் அஜித்குமாரின் இதற்கு மேல் இவருடன் சேர்ந்து இனி எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறினார். மேலும் நடிகர் அஜித்குமார் எனது திரைப்படத்தில் காமெடியே இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் இது எந்த திரைப்படத்தில் காமெடியனாக என்னுடன் சேர்ந்து இவர் நடிக்கவே மாட்டார் என்று ஒரு சமயத்தில் கூறியிருந்தார். 

                                                                                                  

இப்படி நடிகர் வடிவேலு தன்னை சுற்றி உள்ள சினிமா துறையில் உள்ளவர்களிடமும் உன் தன்னை சினிமா துறையில் அறிமுகம் செய்து தூக்கி விட்டவர்களிடமும் இவ்வாறு நடந்திருப்பது பல எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. மேலும் மற்றவர்களை பற்றி அதிகமாக கேளு கிண்டலுடன் பேசிக்கொண்டிருந்தது அனைவரின் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தியது. மேலும் விஜயகாந்த் அரசியல் கட்சியினை ஆரம்பித்த பொழுது  நடிகர் வடிவேலு திமுகவுடன் சேர்ந்து விஜயகாந்தினை அவ்வளவு  தரக்குறைவாக திட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது விஜயகாந்த் இறந்த நிலையிலும் அவரின் உடலை வந்து வடிவேலு பார்க்க கூட இல்லை. சென்னை திரை உலகிற்கு அறிமுகம் செய்து தற்போது அனைவருக்கும் தெரியும் ஒரு இடத்தில் வந்து இருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் விஜயகாந்த் தான். என்னதான் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்தாலும் கூட அவரின் இறப்பிற்கு கூட வராதது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. வடிவேலு நடித்த சினிமாக்களை பார்க்கும் பொழுது அனைவரையும் சிரிக்க வைத்து நகைச்சுவையாக இருக்கும் ஆனால் இவர் நிஜ வாழ்க்கையில் அனைவரையும் இப்படி கூட எதிர்த்து வருகிறார் என்று பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.

                                                                                                

இப்படி எல்லாம் அனைவரையும் எதிர்த்து வருவதால் தான் இவரால் சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியவில்லை என்று தெரிகிறது. ஆனால் இன்றளவும் கூட இவரின் ஆதரவு திமுகவிற்கு தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிங்கமுத்து நடிகர் வடிவேலுவை பற்றி கூறியுள்ளார். அது என்னவென்றால், அரசியலில் முதலில் ஜெயித்துக் கொண்டிருந்த கட்சி இவர் காலடி எடுத்து வைத்த உடன் பெருந்த தோல்விகளை சந்தித்தது. இதனால் அரசியல் எனக்கு ராசி இல்லை என்று அவரே கூறிக் கொள்வார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் கூட  வடிவேலு இனி நீங்கள் எதுவும் பேச வேண்டாம் உங்கள் நாக்கில் சனி உள்ளது என்று கூறியுள்ளார் என்று சிங்கமுத்து கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.