24 special

அய்யோ இந்த நீதிபதியா வேண்டவே வேண்டாம்...! நீதிமன்றத்தில் நீதிபதியை பார்த்து அலறும் பொன்முடி...! அதற்குப் பிறகு நடந்ததுதான் டுவிஸ்டே...!

Ponmudi
Ponmudi

1996 முதல் 2001 வரை தமிழகத்தில் இருந்த திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என அவர் மீதும் அவர் மனைவி விசாலாட்சி மீதும் 2002ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 


இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து பிறகு வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவிக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை எனவும் குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

லஞ்ச ஒழிப்புத் துறையே இந்த வழக்கை முதலில் தாக்கல் செய்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிரான தீர்ப்பை பெற்றுள்ள நிலையிலும் இந்த தீர்ப்பிற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து எந்த ஒரு மேல்முறையீடும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் குற்ற விசாரணை முறை சட்டம் 397 வது பிரிவின்படி நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு முடிவுகளை பெற்றது சரியானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கு குறித்த விசாரணையை பார்க்கும் பொழுது தவறு இருப்பதாக உணர்ந்து தானாக முன்வந்து இந்த வழக்கை மறு ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். 

இதுவரை நான் பார்த்ததிலே மிகவும் மோசமான விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்றால் அது இதுவே அதன் காரணமாகத்தான் இந்த வழக்கை தானாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தரப்பில் கூறப்பட்டது. 

மேலும் இந்த வழக்கு பற்றி பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஏழாம் தேதி இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், அமைச்சர் பொன்மொழி தரப்பில் வழக்கறிஞர் இளங்கோவனும் ஆஜராகினார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் எதற்காக இந்த விசாரணை தானாக முன்வந்து எடுக்கப்பட்டது என்றும் இதற்காக நீங்கள் கூறிய காரணம் விவகாரத்தில் நீங்கள் முன்கூட்டியே ஒரு தீர்மானத்தை எடுத்து அதற்குப் பிறகு இதனை மேற்கொண்டதாக தோன்றுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தனது வாதங்களை முன் வைத்தார். 

பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும் மறு விசாரணை கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆவணங்களும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என  தெரிவித்தவர் உரிய ஆவணங்களை எங்களிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியாக இந்த வழக்கை நீங்கள் விசாரிக்க கூடாது என்று கூறவில்லை சட்டப்படி தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் அதற்கு தான் யார் இதனை விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி நானே இந்த வழக்கை விசாரிக்கிறேனா என்பதை குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்றும் மேலும் இந்த வழக்கை வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தீர்ப்பளித்தார். ஆனால் இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் விசாரித்த பொழுது நீதிபதியை மாற்ற முடியாது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தான் இந்த வழக்கை தொடர்வார் இவர்கள் வசமாக சிக்கிக் கொண்டனர் என தெரிவித்துள்ளனர்.