தமிழகத்தை சேர்த்த ஊடகங்கள் மற்றும் முன்னணி பத்திரிகைகளுக்கு இன்று காலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆளுநர் தமிழிசை, இல. கணேசன், ஆர் என் ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் கூட்டாக சென்னை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் செய்தியாளர்களை சந்திப்பது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்று அதற்கு முழுமையான விடை கிடைத்தது. புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கும் சோழர் பாரம்பரிய செங்கோல் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்த இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அப்போது சன் டிவி மற்றும் தனியார் ஊடக பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் தற்போது வைரலாக தொடங்கி இருக்கிறது. சன் டிவி நிருபர் மேடம் கடந்த காலங்களில் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியர்களுக்கு ஆட்சி மாற்றம் செய்யப்பட்ட போது நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்டது.இப்போது அதற்கு என்ன தேவை வந்தது எனவும் கேட்டார்.
உடனடியாக பதில் சொன்ன அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்ம சன் டிவி கேட்ட நண்பர் சரியாக கேட்டீர்கள் நேருவிடம் கொடுத்த செங்கோல் எங்கு இருக்க வேண்டும்? இப்போது எங்கு இருக்கிறது அதை தான் பிரதமர் மோடி செய்கிறார் என கூறி இருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதே போல் மற்றொரு பத்திரிகையாளர் ஒருவர் சோழர் கால செங்கோல் என எப்படி நம்புவது என எழுப்பிய கேள்விக்கும் செங்கோலில் நந்தி இருப்பது இந்து மத அடையாளமா என கேட்க அதற்கும் சட்டென தனது பாணியில் பதிலடி கொடுத்தார் நிர்மலா சீதாராமன்.
பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடம் குறித்து தமிழகம் சென்று மக்களுக்கு ஊடகங்கள் மூலம் விளக்கம் அளிக்கவும் குறிப்பாக சோழர் கால செங்கோல் குறித்து விவரிக்கவும் உத்தரவு போட்டு இருந்த நிலையில் அதனை சரியாக செய்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்கின்றனர் இன்றைய பத்திரிகையாளர் சந்திபில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதிலை பார்த்தவர்கள்.