ஒட்டு மொத்த நாடும் பத்து வருடங்களுக்கு முன்பு காணாத பல வளர்ச்சிகளையும் உயரங்களையும் தொட்டு வருகிறது. விண்வெளி மற்றும் விஞ்ஞான ரீதியில் பார்க்கும் பொழுது உலக நாடுகளில் இதுவரை சாதிக்காத ஒன்றான நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து இந்தியா சாதித்து உலக நாடுகளை வியக்க வைத்தது. தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில் அபரிவிதமான வளர்ச்சியை தொழில் நிறுவனங்கள் கண்டதோடு நாட்டின் வளர்ச்சியை அவர்கள் தொடர்ந்து உறுதி செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு வேண்டிய நிதி உதவியை வங்கிகள் தங்குதடையின்றி எளிய முறையில் வழங்கும் வசதியை துரித படுத்தியது மேலும் மக்களின் சேமிப்பு விகிதமும் அதிகரிக்க ஒட்டுமொத்த நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் நினைத்திராத பல உச்சத்தை பெற்றது. இதன் வெளிப்பாடாக நாட்டின் வளர்ச்சி விகிதமும், ஜிடிபி யும் ஏழு சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று கடந்த ஆண்டில் கூறப்பட்டது. ஆனால் அதையும் முறியடித்து 8.20 சதவீதமாக நாட்டின் ஜிடிபி புதிய சாதனையை படைத்துள்ளது. இவ்வளர்ச்சிக்கு என்ன காரணம் எங்கிருந்து இந்த வளர்ச்சி தொடங்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது 2014 ஆட்சி அமைத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியும், பிரதம நரேந்திர மோடி முன்வைத்த தொலைநோக்கு பார்வையும், செயல்படுத்திய திட்டங்களுமே இதற்கு முதல் காரணம் என்பது யாரும் மறுத்திடாத உண்மையாக பார்க்கப்படுகிறது.
மேலும் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ரிபப்ளிக் பிமார்க், இந்தியா நியூஸ் தி டைனமிக், ரிபப்ளிக் மேட்ரைஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 360 க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக வெல்லும் எனவும், காங்கிரஸ் 150 இடங்களை மட்டுமே வெல்லும் எனவும் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்திய நாட்டின் வளர்ச்சி தற்போது கண்ட வளர்ச்சியை விட இரண்டு மடங்கு வேகத்தில் அடுத்த கட்ட உச்சத்தை பெறும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்துகளாகும். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் பாஜக மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கு பல தள்ளுபடிகளையும் சேவைகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த நிறுவனங்களுக்காகவே பாஜக செயல்படுகிறது என்று தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
ஆனால் அப்படி நினைத்து இருந்தால் நாட்டின் வளர்ச்சி எப்படி இந்த அளவிற்கு ஒரு சாதனையை பெற்றிருக்க முடியும் என்ற ஒரு கேள்வியும் இதனால் எழுகிறது!! இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பெரிய மதிப்புள்ள வங்கி மோசடிகளை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் விசாரணைக்கான கட்டமைப்பை 2015 இல் எங்கள் அரசாங்கம் வெளியிட்டது. விரைவான மீட்சிக்காக திவால் மற்றும் நொடித்து போதல் கொண்டு வரப்பட்டது. பொய்களைப் பரப்புவதையே வழக்கமாகக் கொண்ட எதிர்க்கட்சிகள், தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களை "தள்ளுபடி" செய்துவிட்டதாகத் தவறாகக் கூறுகின்றன. நிதி மற்றும் பொருளாதாரத்தில் "நிபுணர்கள்" என்று அவர்கள் கூறிக்கொண்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்களால் இன்னும் தள்ளுபடிகள் (write-off) மற்றும் தள்ளுபடிகள் (Discount) ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை என்பது ஒரு பரிதாபம். 2014 - 2023 இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு தொழிலதிபருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், 2014 மற்றும் 2023 க்கு இடையில், வங்கிகள் வாராக் கடன்களிலிருந்து 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திரும்பப் பெற்றுள்ளன. அமலாக்க இயக்குனரகம் (ED) சுமார் 1,105 வங்கி மோசடி வழக்குகளை விசாரித்துள்ளது, இதன் விளைவாக, 64,920 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 2023 நிலவரப்படி, ₹15,183 கோடி மதிப்புள்ள சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.மேலும் 3வது முறை ஆட்சியமைந்தாலும் நிர்மலா சீதாராமன்தான் நிதியமைச்சர் என சில தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன....