தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் தொடர்ந்து ஹீரோயினியாக நடித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி. ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் செய்து வந்த இவர் அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதன் பிறகு முதல் முதலில் கடந்த 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்னும் திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு வெளியான அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் என்னும் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.
இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலகலப்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்து மிகவும் ஃபேமஸான ஹீரோயினியாகவே மாறிவிட்டார். இதனால் இவருக்கு அசைக்க முடியாத ரசிகர் கூட்டமும் அதிக அளவில் இருக்கிறது என்று கூறலாம். இந்த நிலையில் தற்பொழுது நடிகை அஞ்சலி கேங்ஸ் ஆப் கோதாவரி என்னும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படமானது விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் மிக முக்கியமான ரோலில் அஞ்சலி நடித்த வரும் திரைப்படம் ஆகும்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார் என்பது குறித்த செய்திகளும் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி கேங்ஸ் ஆப் கோதாவரி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ஏறிய இவர் அங்கு நின்று கொண்டிருந்த அஞ்சலி மற்றும் நேகா ஷெட்டி ஆகிய இருவரையும் தள்ளி நிற்கும்படி கூறியிருப்பார்.
ஆனால் அவர்கள் இருவருமே அதனை கவனிக்காத நிலையில் அருகில் நின்று கொண்டிருந்த அஞ்சலியை பிடித்து தள்ளிவிட சற்று தடுமாற்றம் அடைந்து சிரித்தபடி அஞ்சலி இருந்தார். இவ்வாறு இவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகினர். இது குறித்த வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி அதிக விமர்சனங்களை பெற்று வந்தது. மேலும் பலரும் பாலகிருஷ்ணாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தனர். ஆனாலும் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் விளையாட்டாக செய்தது தான் என்று கருத்துக்களை கூறி வந்தாலும் கூட பலரும் எதிர்ப்புகளை தான் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை அஞ்சலி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்!! அது என்னவென்றால்...
பாலகிருஷ்ணாவும் அஞ்சலியும் எப்போதும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையை பின்பற்றி வருவதாக அஞ்சலி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி தனது இணையதள பக்கத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதற்காக பாலகிருஷ்ணாவிற்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் எப்போதுமே பரஸ்பரம் மரியாதையை பேணிக்காத்து வருவதாகவும், நீண்ட காலமாகவே நல்ல நட்புறவில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார். எனவே இந்த நிகழ்வில் பாலகிருஷ்ணா பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியானது என தனது இணையதள பக்கத்தில் அஞ்சலி பதிவிட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவ்வாறு நடிகை அஞ்சலி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது அவரின் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.