24 special

கொட்டும் மழையிலும் கோவிலை இடித்த அதிகாரிகள்...! கண்ணீர் விட்ட மக்கள் கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன..?

Kallakurichi
Kallakurichi

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இந்து கோயில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததில்லை. சென்னைக்கு அருகிலுள்ள கிளாம்பாகத்தில்  புதிய பேருந்து நிலையம் அமைத்த போது அங்கு உள்ளே இருந்த கோவிலை இடித்து தரமட்டமாக்கியது. அந்த தொடர்ச்சியாக தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள காந்திரோடு சாலையில் உள்ள பிள்ளையார் கோவிலை இடித்து தரைமட்டமாக்கியது நீர்வளத்துறை அதிகாரிகள். கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்கால் உள்ளது.  இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை ஐகோர்ட் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.

கடந்த மாதத்தில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள கடைகளை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றி வந்தனர். ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 10 கடைகள் மட்டும் இடிக்கப்படவில்லை. அதேபோல் அந்த பகுதியில் அப்பகுதி மக்கள் வணங்கி வரும் சக்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில்கள் அகற்றப்படுவதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் கால அவகாசம் கேட்டும் கலெக்டரிடம் பேச வேண்டும் என்றும் கோவில் உள்ளே தர்ணாவில் ஈடுபட்டனர். காலஅவகாசம் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்ததை தொடர்ந்து, காவல்துறை வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றினர். தொடர்ந்து கோவிலில் உள்ள சிலைகளை வெளியேற்றி கோவிலை இடிக்கும் பணியை தொடங்கினர். 

கோவில் இடிக்கும் பணியின் பொழுது மழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறியது வானமும் கண்ணீர் விட்டு சென்றது என்று செண்டிமெண்டாக கூறினார்கள். கோவிலில் இரண்டு நாட்கள் சிலைகளுக்கு வழிபாடு செய்து அதன் பிறகு சிலையை அகற்றுவதாக அப்பகுதி மக்கள் கூறியிருந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல் நீதிமன்றத்தின் உத்தரவு எனக் கூறி மக்களின் கண்ணீரோடு கோவிலை அகற்றியது. 

சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தினாலும் மாநில இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது, கள்ளக்குறிச்சி காந்திரோடு பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன... என்ன காரணத்திற்காக வேணும்ன்னாலும் இருக்கட்டும் கஞ்சா புழக்கம், ரவுடியிசம், நிர்வாக சீர்கேடு போன்ற குற்றங்கள் மீதான நடவடிக்கைகளில் மெத்தனமாக இருந்துவிட்டு கோவிலை இடிப்பதற்கு மட்டும் இந்துக்கள் விரோத திமுக அரசு அவசரம் காட்டுவது ஏன்.....? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

அதேபோல அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுவது இதுவரை திமுக ஆட்சியில் கோவிலுக்கு என்று என்ன செய்துள்ளது. எல்லாம் கடந்த ஆட்சியில் செய்ததை இந்த ஆட்சி சொந்தம் கொண்டாடுவதை தவிர வேறு எதுவும் செய்ததில்லை என கண்ணீர் மல்க கூறுகின்றனர். இன்று இரு கோவிலும் தமிழக அரசின் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாலே இது போன்ற நடவடிக்கையை சர்வ சாதாரணமாக எடுப்பதாகவும் கூறுகின்றனர்.