
செந்தில் பாலாஜி செய்த மோசடி ஆதாரங்கள் அனைத்தும் ஆவணங்களாக அமலாக்க துறை கைப்பற்றிய நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் அப்பொழுது அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிறகு அறுவை சிகிச்சையும் நடந்தது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவின் படி செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அமலாக்க துறையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவுக்கு எதிராக வாதாடியது மேலும்  உச்ச நீதிமன்றத்தில் இவ் வழக்குக்கு எதிராகவும், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்தது. 
கடந்த மாதத்தில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற விசாரணையின் பொழுதும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.  இந்த நிலையில் நேற்றைய தினம் அமலாக்க துறையின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்றது. அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், செந்தில் பாலாஜியின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார்கள். முதலில் அமலாக்க துறையின் தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‘விசாரணை உயர் நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீது இரண்டு வேறு தீர்வுகளை இன்று வழங்குகிறது ஆனால் எனது கோரிக்கை இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்பது, மேலும் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆதாரங்களை அழித்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
மேலும் இதில் காலம் தாழ்த்தக்கூடாது அதோடு அவரை ரிமாண்ட் செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்வது என்பது சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாதது அதனால் இந்த மனு மீது எழும்  சட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றமே விடை அளிக்க வேண்டும் என்றும் தனது வாதத்தை முடித்துக் கொண்டார். பிறகு செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் குறுக்கிட்டு வாதாடும் பொழுது, உயர் நீதிமன்றத்தில் இன்னமும் தீர்ப்பளிக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையை எவ்வாறு உதறி விட்டு உச்ச நீதிமன்றத்தை முடிவெடுக்க கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார், இவரைப் போன்றே செந்தில் பாலாஜியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹியும் இதே கேள்வி எழுப்ப! நீதிமன்ற தலைமை நீதிபதி வெகுவிரைவில் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கினை விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் விரைந்த விசாரணையை முடிக்கவும், ஒரு வாரத்திற்குள் அமர்வினை அமைக்க வேண்டும் என்று கூறி ஜூலை 24ஆம் தேதிக்கு அமலாக்க துறையின் மேல் முறையீட்டு வழக்கை ஒத்தி வைத்தனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். 
இருப்பினும் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, அதுவரையில் செந்தில் பாலாஜி யார் காவலில் இருக்க வேண்டும் என்று கூற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார் அதற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்காததால் அவர் நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என்றால் அமலாக்கத்துறை காவல் கூறி தனி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம் என்று தெரிவிக்க அதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
தற்பொழுது வரை இந்த வழக்கில் அமலாக்க துறையின் கை ஓங்கி இருப்பதால் விரைவில் செந்தில் பாலாஜி சிறை செல்வதை தவிர வேறு வழி இல்லை என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜிக்கு எதிராக பல ஆவணங்களை வைத்துள்ளதாகவும் ஆனால் செந்தில்பாலாஜி தரப்பு அவரது உடல்நிலை, ஆட்கொணர்வு மனு ஆகிய இரண்டை மட்டும் வைத்து சட்ட ரீதியாக போராடுவதால் இந்த வழக்கு அதிகபட்சம் செந்தில்பாலாஜிக்கு எதிராகவே முடிய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்!
