24 special

எல்லை மீறிய சுசித்ரா... ஒருவேளை அப்படியும் இருக்குமோ!! கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்..!

VIJAY
VIJAY

கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை தொகுதிவாரியாக தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார் விஜய். அதேபோன்று இந்த ஆண்டிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக நடப்பாண்டு 10 மற்றும் 12 பொதுத்தேர்தலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொண்டு வழக்கம்போல் தனது உரையை தொடங்கிய விஜய் ஒருபோதும் தவறான பழக்கத்தில் ஈடுபடாதீர்கள். ஈடுபடவும் கூடாது, ஏனென்றால் சமீப காலமாக தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில், ஒரு பெற்றோர் என்ற முறையிலும் அரசியல் இயக்கத்தின் தலைவன் என்ற முறையிலும் இது குறித்து எனக்கு அச்சம் ஏற்படுகிறது.


போதை பொருளை தடுப்பது அரசின் கடமை ஆனால் ஆளும் அரசு அதனை தவற விட்டு விட்டார்கள் என்பதை பற்றியும் நான் பேச வரவில்லை என்று மாணவ மாணவிகள் அனைவரையும் சே நோ ட்டு டெம்ப்ரவரி பிளசர் சே நோ ட்டு டிரக்ஸ் என்ற உறுதி மொழியையும் ஏற்க வைத்தார். இவ்விழாவில் விஜய் பேசியது சிறிது நேரம் என்றாலும் போதைப்பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது என்பதை நேர்பட பேசினார். இதன் மூலம் திமுக அரசை நேரடியாகவே விஜய் தாக்கி பேசியுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. முன்னதாக விஜய் திரிஷா குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கு விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக விஜயுடன் வெளியில் செல்லும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை திரிஷா பதிவிட்டு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தை  ஆச்சரியப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி விஜய் திரிஷா அடிக்கடி அவுட்டிங் சென்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே விஜய் மற்றும் சங்கீதாவிற்கு இடையே மனஸ்தாபங்கள் இருப்பதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வார்கள் என்ற வகையிலும் கிசு கிசுக்கள் எழுந்து உள்ளதால் இதற்கு காரணம் த்ரிஷாவாகத்தான் இருக்க முடியும் என்ற வகையில் திரிஷாவின் அந்த பதிவுகள் அமைந்தது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விஜய் தரப்பிலும் திரிஷா தரப்பிலும் சங்கீதா தரப்பிலும் கூட இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் உள்ள உண்மையை பேசுகிறேன் என பாடகி சுசித்ரா தொடர்ந்து அதிர்ச்சிகர தகவல்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது, ஏதோ ஒரு சின்ன சண்டையால் ஏற்பட்ட ஈகோவால் பேசாமல் இவ்வளவு பெரிய பிரச்சனையாக்கிவிட்டார் அதனால் உடனடியாக விஜய் தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும், வீம்பிற்காக பிரிந்து போன தனது குடும்பத்தையும் விஜய் சேர்க்காமல் இருப்பதாலே த்ரிஷா போன்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள், லிப்டில் த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட பொழுதே தெரிகிறது விஜய் மீது எவ்வளவு சொந்தம் கொண்டாட த்ரிஷா முற்படுகிறார் என்பது! இதே போன்று தான் எம்ஜிஆர் ஜெலலிதா இடையில் ஏற்பட்டது.

அதே போன்ற பாலிட்டிக்கல் ஃபார்மட்டை காப்பியடிக்கிறார்கள் இவர்கள்! இப்படி எல்லாம் ஒரு தேர்தலை ஜெயிக்க முடியாது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறுகிறார்கள் என்றால் அது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு ஆனால் ஒரு தேர்தலையே சந்திக்காத கட்சி தலைவராக சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறும் பொறுப்பு அவருடையது அல்ல! என விஜய் மற்றும் திரிஷா குறித்து தாறுமாறாக பேசி உள்ளார், இதற்கு  விஜய்யின் ரசிகர்கள் சுசித்ராவிற்கு விரைவில் இணையத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார்கள் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.