24 special

இனி அரசியல் வாழ்க்கையே கிடையாதாமே...! செந்தில்பாலாஜிக்கு ஆளுநர் செய்த சம்பவம்...!

Mehala, senthilbalaji
Mehala, senthilbalaji

செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்காக அமலாக்கத்துறை தனது திறமையான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து வருகிறது, இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான மூன்றாம் தரப்பு நீதிபதி விசாரணை 2 நாட்களாக நடந்து வருகிறது.


அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிஜிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, சட்டவிரதம் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டாலும் அவரிடம் புலன்விசாரணை மேற்கொள்வதற்கு அதிகாரம் உள்ளது, புலன் விசாரணை அமலாக்கத்துறை செய்ய முடியாது என எதிர் தரப்பு வாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை முடக்க மட்டுமே செய்ய முடியும். மேலும் அதில் ஏழு ஆண்டுகளுக்கு வரை தண்டனை வழங்க மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பணத்தை இழந்து உள்ளனர் அதனால் எங்கள் கடமையை நாங்கள் செய்ய வேண்டும் விசாரணை அழைத்தாலும் வர மறுக்கிறார்கள் சம்மன் அனுப்பினாலும் அதற்கு பதில் இல்லை, எனவே அமலாக்கத்துறைக்கு  செந்தில் பாலாஜி கைது செய்து விசாரணை செய்யும் அவசியமுள்ளது என்று தனது வாதங்களை முன் வைத்தார். இதற்கிடையில் வருமானவரித்துறையும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது, இரண்டு முறை அனுப்பப்பட்ட சம்மனிருக்கும் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை செந்தில் பாலாஜி ஆஜர் ஆகாததால் கடந்த 2 தினங்களாக விடிய விடிய கரூர் மற்றும் கோவை சுற்று வட்டார பகுதிகளில் ஐ டி துறை ரெய்டில் இறங்கியது. 

இப்படி ஒரு பக்கம் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மறுபக்கம் வருமான வரித்துறை தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக மற்றுமொரு சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதனிடையில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக அட்டர்னி ஜென்ரலுடன் ஆளுநர் ஆர் என் ரவி சந்திப்பு நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த இரண்டு பொறுப்புகளையும் இரு வேறு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது இருப்பினும் அமைச்சரவையில் தொடர்வார் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. 

ஆனால் தமிழக ஆளுநர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் தனக்கு விருப்பமில்லை என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். இருப்பினும் தமிழக அரசு தான் அறிவித்த அறிவிக்கையிலே நிலையாக நின்றது. பிறகு ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பை வெளியிட்டார் அது பெரும் பரபரப்பானது பல விமர்சனங்கள் ஆளுநருக்கு எதிராக முன்வைக்கப்பட்டது, பிறகு ஆளுநர் ஆர் என் ரவி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கப்படுகிறார் என்ற அறிக்கையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார் மேலும் அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சருடைய ஆலோசனையின் பெயரிலும், உரிய அறிவுறுத்தலை தலைமை வழக்கறிஞருடன் பெற்ற பிறகு அறிவிப்பு வெளியாகும் அதுவரை செந்தில் பாலாஜி பதவி நீக்கம் பற்றிய அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறியிருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதற்கு பிறகு டெல்லி விரைந்த ஆளுநர் துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சில ஆலோசனைகள் மேற்கொண்ட நிலையில் அட்டார்னி ஜெனரலை சந்தித்து செந்தில்பாலாஜி விவகாரம் குறித்து கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார், இந்த ஆலோசனை முழுக்க முழுக்க செந்தில்பாலாஜி விவகாரம்தான் என தகவல்கள் கிடைத்துள்ளன! செந்தில் பாலாஜி அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என கூறும் அளவிற்கு அவரது வழக்கு ஒரு புறமும், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ஆளுநர் கையில் மறுபுறமும் இருந்து தற்போது ஆட்டம் கண்டு வருகிறது.