சென்னையை புரட்டி போட்ட மிக்ஜம் புயலின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது, மக்களை மீட்கும் பணிகள் ஆங்காங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் பெரும்பாலான மக்கள் மழை நீருக்குள் சிக்கித் தவிக்கும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் வெள்ளம் சூழ்ந்த பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண பணிகளையும் ஆய்வு செய்தார்.இதனை அடுத்து மக்களை மீட்க 18 ஆயிரத்து நானூறு காவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இருப்பினும் பொதுமக்கள் அரசு மீது பெரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து சென்னையில் மழை நின்ற பிறகு நிவாரண பணிகளை மேற்கொள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் அதே சமயத்தில் இதுவரை எங்கள் பகுதியில் ஒரு நிவாரண பொருட்களும் வழங்கப்படவில்லை மீட்பு பணிகள் ஒன்றும் நடைபெறவில்லை காவல் அதிகாரி ஒருவரை கூட பார்க்க முடியவில்லை தேங்கியிருக்கும் தண்ணீரும் வடியவில்லை வடிவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கொந்தளிப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக அமைச்சர்கள் பார்வையிட செல்லும் பொழுது அவர்களிடம் முறையிட்டு வருகின்றனர்.
இருப்பினும் நிவாரண பணிகள் அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது என்றும் அவற்றைப் பார்வை இடுவதற்கு முதல்வர் சென்னையில் உள்ள சில பகுதிகளுக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று உலா வருகிறது அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடுக்கத்தோடு நடப்பதும் ஜீப்பில் ஏறும் போது தடுமாறுவதும் அவரை அருகில் இருக்கும் காவலர் தாங்கி பிடிப்பதும் இடம்பெற்றுள்ளது அது மட்டும் இன்றி அவர் நடந்து வரும் பொழுது எந்த ஒரு மாற்று அசைவுகளும் இன்றி மெதுவாக நடந்து வந்து காரில் உள்ளே ஏறும் பொழுது சரியாக அவரால் ஏற முடியாமல் முதல்வரின் காவலுக்கு இருக்கும் காவலர்கள் தாங்கி பிடித்து அவரை கார் சீட்டில் அமர வைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ குறித்து ஏன் என்ன ஆயிற்று முதல்வருக்கு உடல்நிலை சரியில்லையா என்ன விசாரித்த பொழுது முதல்வர் ஓய்வு இல்லாமல் சுற்றி வருவதாகவும் அதனால் இவருக்கு இப்படி ஒரு நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதன் பின்னணி குறித்து விசாரணை செய்த பொழுது தொடர்ச்சியாக திமுகவினர் மீதான அமலாக்கத்துறை ரெய்டு, நீதிமன்ற வழக்கு, 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதற்கு முக்கிய காரணமாக தன் மகனின் சனாதன பேச்சு இருப்பது, இதனால் காங்கிரஸ் திமுக இடையே உரசல் இருப்பது, எங்கு கூட்டணியில் இருந்து துரத்தி விடுவார்களோ என்ற அச்சம், மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மக்கள் அரசியல் மீது கொண்டுள்ள கோபம் இவை அனைத்தும் முதல்வரை உடைத்து விட்டதாகவும் இதன் காரணமாக தற்போது மிகவும் தளர்ந்து விட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.