Tamilnadu

ஒருத்தனும் தப்ப. கூடாது மோடியின் ஆர்டர் சிறப்பாக செய்து முடித்த "ரா" தரமான சம்பவம்..!

modi
modi

இந்தியாவிற்கு எதிரான நபர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் தேடி செல்லவேண்டிய இடத்திற்கு அனுப்பும் பணியை உளவு அமைப்புகள் செய்யவேண்டும் என பிரதமர் மோடி 2014 -ல் முதல்முறையாக பதவி ஏற்ற போதே அறிவுறுத்தியதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது.


உங்களில் பலருக்கு நியாபகம் இருக்குமோ என தெரியவில்லை உலக அளவில் இந்தியாவிற்கு பெருத்த தலைகுனிவை தேடி தந்த சம்பவம் அது ஆம் இந்தியாவின் விமானம் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது, பயணிகளை மீட்க இந்தியாவில் கைது செய்யபட்ட தீவிரவாதிகளை விடுவிக்கவும் செய்து உலக அரங்கில் தலை குனிந்து நின்றோம் ஆனால் இன்று அதற்கு முடிவுரை எழுதபட்டு உள்ளது. இந்தியாவின் உளவு அமைப்புகள் அதனை காதும் காதும் வைத்தது போன்று செய்து வருகின்றனர்.

டிசம்பர் 24, 1999 அன்று, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புது தில்லி நோக்கிச் சென்றது, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹர்கத்-உல்-முஜாஹிதீன் மூலம் கடத்தப்பட்டது.

அந்த விமானம் லக்னோ அருகே இருந்தபோது பயங்கரவாதிகளால்  கடத்தப்பட்டது.  எரிபொருள் நிரப்புவதற்காக ப அமிர்தசரஸுக்கு கொண்டு செல்லப்பட்டது.  பின்னர் அது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு பயணிகள் மற்றும் பணியாளர்கள் எட்டு நாட்களுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்திய சிறையில் உள்ள மூன்று முஹமத் அசார் உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது, பேச்சு வார்த்தை சென்று கொண்டு இருக்க மறுநாள் டிசம்பர் 25 ஆம் தேதி இந்தியப் பயணி ரூபின் கத்யால் (25) மிஸ்திரியால் கொடூரமாகக் கத்தியால் அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இதையடுத்து மற்ற பயணிகளை காப்பாற்ற மூன்று தீவிரவாதிகளையும் விடுவித்தது இந்தியா பின்பு அனைவரும் மீட்கப்பட்டனர் கொலை செய்யப்பட்ட ரூபின்   உடல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து மீட்கப்பட்டது.

ரூபின் தனது மனைவியுடன் காத்மாண்டுவில் தேனிலவுக்குப் பிறகு தில்லிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம், மசூத் அசார் அல்வி, சையது உமர் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகிய மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க  விமானக் கடத்தல் நிலைமை முடிவுக்கு வந்தது.

கடத்தலில் ஈடுபட்ட ரூபிணை கழுத்தை அறுத்து கொலை செய்த சஹீர் மிஷிறி தற்போது மர்மமான முறையில் கொலை செய்யபட்டுள்ளான்.மார்ச் 1ம் தேதி கராச்சி நகரில் பைக்கில் வந்த இருவர் நடத்திய தாக்குதலில் மிஸ்திரி கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  இந்த கொலை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என பாகிஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பாகிஸ்தானிய செய்தி நிறுவனமான ஜியோ டிவி இந்த மரணத்தை உறுதிப்படுத்தியது மற்றும் கராச்சியில் ஒரு "தொழிலதிபர்" கொலை செய்யப்பட்டார் என பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டது.

தகவல்களின்படி, மிஸ்திரி 'ஜாஹித் அகுந்த்' என்ற புதிய அடையாளத்தின் கீழ் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்துருக்கிறான் , மேலும் பர்னிச்சர் கடையும் நடத்தி வந்திருக்கிறார்.

பாகிஸ்தானை சேர்ந்த ஜியோ டிவியால் பகிரப்பட்ட கொலையின் சிசிடிவி காட்சிகள், அக்தர் காலனியின் தெருக்களில் ஆயுதம் ஏந்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சுற்றித் திரிந்ததை காட்டியது.

விமான கடத்தலில் ஈடுபட்ட 5 நபர்களில் இருவர் ஏற்கனவே 2019 பாலகோட் தாக்குதலில் இறந்துவிட இப்போது மிஸ்திரி மர்ம மரணம் அடைந்துள்ளார், இதனை இந்தியாவின் உளவு அமைப்பு செய்து இருப்பதாக பலரும் சந்தேகம் கொள்கின்றனர் இந்தியா தனக்கு எதிரியாக கருதப்படும் நபர்களை இஸ்ரேல் மொசட் பாணியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தேடி தேடி பலி வாங்கி வருகிறது.

இந்தியாவிற்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டால் இன்று அல்ல 20 ஆண்டுகள் ஆனாலும் தேடி வந்து பலி தீர்ப்பார்கள் என்று அவர்கள் மனதில் பதிய வைத்துள்ளது. இந்தியாவின் உளவு அமைப்பு இதை செய்ததாக எந்த வித ஆதாரமும் இல்லை, ஏன் என்றால் உளவு அமைப்புகள் எதையுமே ஆதாரம் இன்றி தான் செய்யும் மேலும் தாங்கள் தான் அதை செய்தோம் எனவும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் தங்களுக்கு ஆதரவாக செயல்படும் உளவாளிகள் குறித்த தகவல் வெளியாகமல் இருக்க.

தன் மனைவியுடன் திருமண பந்ததை கொண்டாட சென்ற ரூபின் ஆன்மாவிற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு சாந்தி கிடைக்கும் என இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசும் நிகழ்வாக இருக்கிறது.

INPUT - உதயகுமார் செந்திவேல்

More Watch Videos