Trending
அஸ்ஸாம் : மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் சென்றுள்ள மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். மேலும் மக்களிடையே பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
கௌஹாத்தியில் ஓராண்டுநிறைவு விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் மக்களிடையே அமைச்சர் அமித்ஷா பேசுகையில் " நான் அஸ்ஸாம் மேற்குவங்கம் என இருமாநிலங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். மேற்குவங்கமும் அஸ்ஸாமும் ஊடுருவலை தடுத்து நிறுத்த வேண்டும். இரு மாநிலங்களிலும் ஊடுருவலை தடுக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் மேற்குவங்கத்தில் ஊடுருவலுக்கு எதிராக பெரிய ஆதரவு இல்லை.
ஆனால் அஸ்ஸாம் வலுவாக நின்றது. ஊடுருவலுக்கு எதிராக ஊடுருவலை தடுக்கமத்திய துணை ராணுவப்படையுடன் இணைந்து ஊடுருவ முடியாத ஒரு தடுப்புசுவரை எழுப்பியுள்ளது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி மத்திய அரசும் அஸ்ஸாமும் நடவடிக்கை எடுத்துவருகிறது. நேற்று நான் எல்லைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். ஊடுருவல்கள் கணிசமான அளவில் குறைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன" என அமித்ஷா உரையாற்றினார்.
மேலும் மேற்குவங்கம் ,அசாம், திரிபுரா மற்றும் மிசோராம்,மேகாலயா போன்ற மாநிலங்கள் 4156 கிலோமீட்டர் நீளமான இந்தியா வங்காளதேச எல்லையை பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாநிலங்களின் எல்லைப்பகுதியில் 50 கிலோமீட்டர் வரை BSF எல்லையை விரிவுபடுத்தி மத்திய அரசு அறிவித்திருந்தது.
அஸ்ஸாம் மேகாலயா மற்றும் திரிபுரா உள்ளிட்ட எல்லைப்பகுதி மாநிலங்கள் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டாலும் மேற்குவங்கம் மட்டும் தற்போதுவரை எதிர்த்து வருகிறது. மேலும் BSF வீரர்கள் எல்லை கடந்து உள்ளே வந்தால் அவர்களை மாநில போலீசார் கைதுசெய்யலாம் என்ற சட்டத்தையும் மமதா பிறப்பித்துள்ளார். மேற்குவங்க தேர்தல்களில் ஊடுருவல்காரர்களின் பங்கு அதிகம் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
Related News
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Don’t worry, we don’t spam